அமெரிக்காவின் பிரபல சமூக வலைதளங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்களை குறி வைக்கும் முக்கிய நிறுவனம்!

0
146

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த வருடம் குளிர்காலம் மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போதைய பொருளாதார மந்த நிலை வருவாய் லாபம் இல்லாமல் இருப்பது செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்து வருகின்றார்கள்.

ட்விட்டர் முகநூல் மற்றும் அமேசான் உள்ளிட்ட தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்களுடைய வீழ்ச்சி பெற்ற வருவாயை மீட்டெடுக்கும் பொருட்டு, நிதிநிலை செலவினங்களை மறு கட்டமைக்கவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர்.

எரான் மஸ் ட்விட்டரின் ஆட்சியை கைப்பற்றிய உடன் சற்றேற குறைய ஆயும்போது சதவீத ஊழியர்களை வெளியேற்றிய அதே சமயத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் அவர்களும் மெட்டாவில் சுமார் 13,000 ஊழியர்களை தளங்களில் இருந்து குறைத்து உத்தரவிட்டார். சமீபத்தில் அமேசான் சுமார் 10,000 ஊழியர்களின் வேலையை பறித்தது.

ஆனாலும் கூட ஏதோ ஒரு வகையில் நல்லது நடக்கத்தான் செய்கிறது என்பதைப்போல பெரிய நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்களுக்கு ஒரு நிறுவனம் 1 மில்லியன் அதாவது சுமார் 81 லட்சம் கொடுத்து வேலையில் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் டே ஒன் வென்ச்சர் நிறுவனம் தற்சமயம் நடைபெறும் ஆட்குறைப்புகளில் வேலையை இழந்த ஊழியர்களுக்காக ஒரு தனி திட்டத்தை அறிவித்திருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் தலைமையிலான 20 புதிய ஸ்டார்ட் அப் குழுக்களுக்கு அந்த நிறுவனம் 1 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்க இருப்பதாக தெரிகிறது.

ஆக மொத்தம் ட்விட்டர், அமேசான், ஃபேஸ்புக் மற்றும் மற்ற நிறுவனங்களால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அதன் 52.5 மில்லியன் நிதியிலிருந்து 5 மில்லியன் டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களில் மிகப்பெரிய பதவிகளில் இருந்தவர்கள், ஆனால் பணி நீக்கம் காரணமாக, வேலையை விட்டு நின்று விட்டவர்கள் அல்லது தங்களுடைய சொந்த தொழிலை ஆரம்பிக்க விருப்பம் கொண்டிருப்பவர்களுக்காக இந்த நிதி உதவியை இந்த நிறுவனம் வழங்குகிறது.

டே ஒன் வென்ச்சர் நிறுவனத்தை தவிர்த்து பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வாய்ப்புகளை வழங்க பல நிறுவனங்கள் இருக்கின்றன. பல நிறுவனங்களில் மூத்த நிர்வாகிகள் வேலை வாய்ப்புகள் வழங்க தயாராக இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.