Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த மாநாடு – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!!

#image_title

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த மாநாடு – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!!

அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது, இதனை தொடர்ந்து கட்சியில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என எடப்பாடி பழனிசாமி கடந்த வருடம் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தனது ஆதரவாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை சற்றும் எதிர்பாராத பன்னீர்செல்வம் நீதிமன்ற கதவுகளை தட்டி தனது தரப்பு வாதங்களை வைத்தார்.

பன்னீர்செல்வம் பலமுறை நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி தனது வாதங்களை பல முறை வைத்தாலும், எடப்பாடி அதை அசால்டாக தட்டி தூக்கி தனக்கு எதிராக போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

பன்னீர்செல்வத்திற்கு பக்கபலமாக அதிமுக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனையில் திருச்சி மாவட்டத்தில் வரும் 24ம் தேதி மாபெரும் பொது கூட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

இந்த பொது கூட்டம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறும் போது, திருச்சியில் வரும் இருபத்தி நான்காம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சியின் பொன்விழா, மாநாடு ஆகிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது, அதிமுகவின் தலைவரை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் வேறு யாரும் முடிவு செய்ய முடியாது என்பதை எம்ஜிஆர் விதிகளாக வகுத்துள்ளார் .

அதிமுகவின் 75 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர் , தஞ்சாவூரில் அனைவரும் பன்னீர்செல்வம் பக்கமே உள்ளனர். இந்த மாநாட்டில் மூன்று லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இது அமையும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version