Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாநகராட்சியின் சிறப்பான முயற்சி! மக்கள் ஆதரவு!

கொரானா பல்வேறு விதமாக பரவி வருகின்றது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு உடலில் பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளவர்களும் உண்டு. தனிமையில் வீட்டில் இருப்பவர்களும் உண்டு.

 

அப்படி தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் முககவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை சேகரித்து நீக்கும் பணியை செய்ய தொடங்கி உள்ளது, கோவை மாநகராட்சி அரசு.

 

அவ்வாறு , அவர்கள் தனிமையில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் முககவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை சேகரிக்க வீடு வீடாக சென்று மஞ்சள் நிற பிளாஸ்டிக் பைகள் கொடுக்க படுகிறது.

 

கோவையில் என்னதான் வைரஸ் கட்டுக்குள் வந்தாலும், பலர் வீட்டு தனிமையில் உள்ளனர். அதனால் அவர்கள் பயன்படுத்தும் முககவசம் , கையுறை, sanitizer, கையுறை ஆகியவை பொது குப்பைகளுடன் கலந்து தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தொற்றாளர்கள் பயன்படுத்தும் பொருட்களை கையாளும் துாய்மை பணியாளர்களுக்கு, தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால், மருத்துவ கழிவுகளை கையாள, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் இந்த புதிய ஏற்பாடு செய்துள்ளார்.

 

அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமையில் இருப்பவர்களின் வீடுகளுக்கு மாநகராட்சி பணியாளர்கள் பி.பி.இ., கிட் உடை அணிந்து சென்று, மஞ்சள் நிற பிளாஸ்டிக் பைகளை வழங்கி வருகின்றனர்.

 

வாரம் ஒரு மஞ்சள் பை வீதம், இரண்டு முறை வழங்கப்படும். பொதுமக்கள் இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து, தனியாக மருத்துவ கழிவுகளை மஞ்சள் பையில் போட்டு சேகரித்து வழங்க வேண்டும். பொதுக்குப்பையோடு கலந்து போடக்கூடாது. மருத்துவ கழிவுகளை சேகரிக்க நியமித்துள்ள பணியாளர்கள், அவ்வீடுகளுக்குச் சென்று, சேகரித்து விதிமுறைக்கு உட்பட்டு அதனை அழித்து விடுவர் என மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறியுள்ளார்.

 

மாநகராட்சியின் இந்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.

 

Exit mobile version