இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..!

0
226
#image_title

இந்த பானம் முதுகு வலியை பறந்து போகுச் செய்யும்..!

பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் முதுகு வலி பிரச்சனையால் பல தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். நெடு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தால், வேலை அதிகம் செய்தல், எலும்பு பலவீனம் உள்ளிட்ட காரணங்களால் முதுகு வலி உண்டாகிறது.
இதை குணமாக்க இயற்கை வைத்திய முறைகளை முயற்சிப்பது நல்ல பலனளிக்கும்.

தேவைப்படும் பொருட்கள்…

*நெய்
*கடலை மாவு
*மிளகு
*மஞ்சள் தூள்
*காய்ச்சிய பால்
*சாலியா விதை
*பாதாம்
*ஏலக்காய் தூள்
*ஜாதிக்காய்

*நாட்டு சர்க்கரை

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவு சாலியா விதை சேர்த்து தண்ணீர் ஊற்றி 5 முதல் 6 மணி நேரம் வரை ஊற விடவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு நெய் சேர்க்கவும். அடுத்து அதில் 1 1/2 ஸ்பூன் அளவு கடலை மாவு சேர்த்து கிளறவும்.

அடுத்து சிட்டிகை அளவு மஞ்சள், 2 கப் காய்ச்சிய பால் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் 10 மிளகு, 6 பாதாம் பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொதிக்கும் பால் கலவையில் சேர்த்து கிளறி விடவும்.

அடுத்து ஊறவைத்த சாலியா விதையை கொதிக்கும் பாலில் சேர்த்து கலந்து விடவும். பிறகு வாசனைக்காக 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.

ஒரு ஜாதிக்காய் எடுத்து துருவி ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதில் சேர்த்து கலந்து விடவும். அடுத்து அடுப்பை அணைத்து தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.