Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூன்று வருடங்கள் ஓடிய படத்தை பற்றி தெரியுமா?

#image_title

இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் ஓடினாலே மற்றும் 100 நாட்கள் ஓடினாலே மிகப்பெரிய சாதனை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆனால் அந்த காலகட்டத்தில் ஒரு படம் மூன்று வருடங்களாக ஓடியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. இந்தப் படம் மொத்தமும் 133 வாரங்கள் ஓடி மூன்று தீபாவளிகளிலும் ஓடி இருக்கிறது.

 

இப்படி ஓடிய படம் தான் தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’ . இதில் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.

 

1944 வெளியிட்ட இந்த படம் 1946 ஆம் ஆண்டு வரை ஓடிக்கொண்டிருந்ததாம். அப்படி இருந்த இந்த படத்தின் கதை தான் என்ன.l?

 

ஹரிதாஸ் என்கிற ஹீரோ பெற்றோர்களுக்கு அடங்காமல் மனைவி சொல் மந்திரம் என அவளிடம் நடித்துக் கொண்டிருக்கிறான். அவளிடம் நடித்துவிட்டு மற்ற பெண்களுடன் நன்றாக சுற்றி திரிந்து கொண்டிருக்கிறான்.

 

அப்பொழுது ரம்பா என்ற தாசியுடன் பழக்கம் ஏற்படுகிறது. அவள் நடனத்தில் மயங்கி அவர்களின் கூட்டத்தையே வீட்டிற்கு கூட்டி வந்து விடுகிறார்.

 

ரம்பா ஒரு தாசி என்ற உணர்ந்த ஹரிதாசின் மனைவி அவளைத் திட்டி வீட்டில் விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். இதனால் கடும் கோபம் கொண்ட ரம்பா, அவருடைய ஆட்களை வைத்து ஹரிதாசின் மனைவியை ஒரு மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்துகிறார்.

 

இதை அறிந்து கொண்ட ஹரிதாசின் தந்தை ஹரிதாஸின் மனைவியை காப்பாற்றுகிறார்.

 

ரம்பா ஹரிதாசிடம் உங்களது தந்தையால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது என நாடகமாட, பெற்றோர்களையே வீட்டை விட்டு அனுப்புகிறார் ஹரிதாஸ்.

 

பின் நாளுக்கு நாள் ரம்பவுடன் பழக்கம் அதிகமாக ஏற்பட்டு தனது வீட்டையே ரம்பாவின் மேல் எழுதி வைக்கிறார்.

 

ஹரிதாசையும் ஹரிதாஸின் மனைவியும் திட்டமிட்டு வெளியே அனுப்புகிறாள் ரம்பா.

 

அதனால் ஹரிதாசும், ஹரிதாசும் மனைவியும் வனவாசம் போல் காடுகளில் சென்று வாழ்கிறார்கள். அப்பொழுது கங்கா யமுனா சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களை பார்த்த ஹரிதாஸ், அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே என்று நினைத்து அவர்களுக்கு வரம் தந்த முனிவரை காலால் எட்டி உதைக்க செல்கிறார் ஹரிதாஸ்.

 

அடுத்த கணமே அவரது கால் துண்டாகிறது. தவறை உணர்ந்த ஹரிதாஸ் எப்படி இதிலிருந்து மீட்பது என்று கேட்ட பொழுது,பெற்றோர்களே தெய்வம் அவரை வணங்குங்கள் என்று முனிவர் மறைகிறார். பின் பெற்றோர்களை தெய்வமாக மதித்ததினால் கால் திரும்ப வருகிறது.

 

இப்படி இந்தப் படம் மிகவும் சுவாரசியமாகவும் எடுக்கப்பட்டிருந்ததால் மூன்று வருடங்கள் இந்த படம் ஓடி இருக்கிறது. 1944 லேயே இந்த படம் 20 லட்சத்திற்கும் மேல் வசூலை ஈட்டியது.

 

1944ம் ஆண்டு தீபாவளி அன்று (16 அக்டோபர்) சென்னை சன் தியேட்டர்சில் திரையிடப்பட்ட இப்படம் அதே திரையரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. 1946 தீபாவளி நாள் (22 நவம்பர்) வரை தொடர்ந்து ஓடியது. பிற திரையரங்குகளையும் சேர்த்து மொத்தம் 133 வாரங்கள் ஓடியது.

Exit mobile version