Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தையில்லை என்ற வருத்தமா? இந்த பூ போதுமே!

This flower is enough for baby

This flower is enough for baby

குழந்தையில்லை என்ற வருத்தமா? இந்த பூ போதுமே!

குழந்தையே இல்லை என இயங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். காரணம் உணவுப் பழக்கங்களால் மற்றும் நாகரிகம் பழக்க வழக்கங்களால் பெண்களின் கருமுட்டையின் வளர்ச்சி தடைபட்டு குழந்தையின்மை, கருமுட்டை வளராமல் இருத்தல் போன்ற கர்ப்பப்பை பிரச்சனைகள் அதிகமாக இந்த சூழ்நிலையில் இருக்கின்றன. இப்பொழுது உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம் இந்த பூ உங்களது கர்பப்பை பிரச்சனைகளை தீர்த்து வைத்து உண்டாவதற்கு வழி வகுத்துக் கொடுக்கும்.

அந்த பூவின் பெயர் பூவரசம் பூ. இந்த பூவை நீங்கள் பல்வேறு இடத்தில் பார்த்திருக்கலாம். ஆனால் இந்த பூவின் பெயர் தெரியாமல் இருக்கலாம். அதே போல் இதன் நன்மைகளும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

பூவரசம் பூ பயன்கள்
பூவரசம் பூ பயன்கள்

1. பூவரசம் பூ மற்றும் இலையை காலையில் வெறும் வயிற்றில் துவையலாகவோ அல்லது அரைத்தோ பெண்களுக்கு கொடுக்கலாம்.

2. இந்த துவையலை மோரில் கலந்து கூட குடிக்கலாம்.

3. கிராமப்புறங்களில் கர்ப்பப்பையை வலுப்படுத்தவும், கர்பப்பை பிரச்சனைகளை சரி படுத்தவும் இந்த துவையலை காலையில் பெண்களுக்கு கொடுக்கிறார்கள்.

4. அதுமட்டுமின்றி இந்த பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து பித்த வெடிப்புக்கு பயன்படுத்தலாம்.

5. மேலும் இதன் அரைத்த விழுதை ஆசன வாய் வெடிப்புக்கு பயன்படுத்தலாம்.

6. மூல நோய் உள்ளவர்கள் இதன் விழுதை வெளிப்புறமாக தடவி வந்தால் புண்கள் சீக்கிரம் ஆறும்.

7. மேலும் பெண்களின் முகம் பளபளக்க, தோல் சரும பிரச்சனைகள் நீங்க இந்த பூவை அரைத்து முகத்தில் பூசி வரலாம்.

Exit mobile version