Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!!

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!!

கண் அரிப்பு, கண் சிவந்தல், கண் வலி போன்ற பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒரு பூவைப் பற்றி காண்போம். அது வேறு எதுவும் இல்லை நந்தியாவட்டை பூதான். இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.

இந்தச் செடி சுமார் 1.5 – 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், பூ, இலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.

பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் வீட்டின் முன்பகுதியில் அதன் மருத்துவ குணம் தெரியாமல் பலரும் இதை வளர்த்து வருகின்றனர்.

இந்த நந்தியாவட்டை செடியின் உடைய பூக்களை கண்களில் வைத்து ஒத்தடம் கொடுத்து வர கண் அரிப்பு கண் வலி கண் சிவப்பது எல்லாமே உடனடியாக தீரும். குறிப்பாக இந்த பூக்களில் பூச்சி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் பூச்சிகள் கண்களுக்குள் செல்லக்கூடாது.

இந்த பூக்களை கண்ணின் மேல் வைத்து இரவு தூங்கவும் செய்யலாம். இந்த பூக்களை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்களுக்கு வெயிலில் வைத்து ஊற விடவும்.

அப்போது இந்த பூவின் சாரெல்லாம் அந்த எண்ணெயில் இறங்கி கலந்து விடும் பிறகு அதை நம் கண் மருந்தாகவும் பயன்படுத்தி வரலாம்.இவ்வாறு இதை கண் மருந்தாக பயன்படுத்தி வர கண் வலி, கண் அரிப்பு மற்றும் கண் சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

Exit mobile version