இனி கோவில்களில் இந்த பூ வை பயன்படுத்தக் கூடாது!! மாநில அரசு போட்ட திடீர் உத்தரவு!!
கோவில்களில் பொதுவாகவே சாமிக்கு அரளிப் பூக்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். அணைத்து கோவில்களிலும் துளசி அல்லது சாமந்தியுடன் அரளியை கலந்து சாமிக்கு அணிவித்து வழிபட்டு வருவர். ஆனால் இந்த அரளிப் பூவால் ஒருவர் உயிர் இழக்க நேரிட்டதால் இனி எந்த கோவில்களிலும் இதனை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் தான் சூர்யா சுரேந்திரன். இவர் வெளிநாட்டிற்கு செல்வதற்காக பல மாதங்கள் முயற்சித்து வந்துள்ளார். இறுதியில் அவர் வெளிநாட்டிற்கு செல்வது உறுதியான நிலையில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். ஒரு நாள் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தன் வீட்டிற்கு வெளியில் உள்ள அரளி பூ மற்றும் செடியினை விளையாட்டுத்தனமாக சாப்பிட்டு உள்ளார்.
இதன் விளைவாக அவருக்கு தொடர் மயக்கம் வாந்தி போன்ற உபதைகள் ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு சூர்யா கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களிடம் நான் அரளிப்பூ மற்றும் இலையை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சூர்யா உயிரிழந்தார்.மேற்கொண்டு அவரது உடலை உடற் கூறாய்வு செய்ததில், அரளிப் பூ மற்றும் இலையை சாப்பிட்டதன் விஷம் தான் அவர் இறப்பிற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
மேற்கொண்டு இந்த பூவினை எரித்தால் கூட அதிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதும் ஒரு விஷம்தான் என்றும் கூறியுள்ளனர். கோவில்களில் பூக்களை பயன்படுத்திவிட்டு பொதுவாகவே அதனை எரிப்பதும் குளத்தில் போடுவதுமாக வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதால் அதன் விஷம் மக்களை பாதிப்படைய செய்யும். அதனால் கேரளாவில் உள்ள எந்த ஒரு கோவில்களிலும் இனி அரளிப்பூ உபயோகிக்க கூடாது என்று தடை விதித்துள்ளனர்.