வீட்டிலிருக்கும் இந்த காய் போதும் நாள்பட்ட தலைவலியை 5 நிமிடத்தில் சரி செய்யலாம்!!
இன்றைய காலகட்டத்தில் தலைவலி என்பது அனைவருக்கும் ஏற்படக் கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்றாக இருக்கிறது.தலைவலி வந்து விட்டால் தலையில் அழுத்தம்,மூளை பகுதியில் வலி ஏற்படுவது போன்ற உணர்வு உண்டாகும்.
தலையில் அதிகளவு வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது.தலையில் அடிபடுதல்,தூக்கமின்மை,மன அழுத்தம்,டென்ஷன்,கோபம்,உடல்நலக் கோளாறு போன்ற காரணங்களால் தலைவலி உணடாகிறது.
தலைவலி குணமாக மாத்திரை வாங்கி உண்டால் அவை சில மணி நேரத்திற்கு மட்டுமே பலன் கொடுக்கும்.பின்னர் மீண்டும் தலைவலி உண்டாகி பெரும் தொந்தரவுகளை கொடுக்கும்.எனவே எவ்வகை தலைவலியாக இருந்தாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றினால் உடனடி மற்றும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)கொத்தவரங்காய்
2)எலுமிச்சம் பழம்
3)கத்தரிக்காய்
செய்முறை:-
முதலில் 5 கொத்தவரங்காய்,2 கத்திரிக்காயை நீரில் போட்டு கழுவிக் கொள்ளுங்கள்.பிறகு இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளங்கள்.
அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் கொத்தவரங்காய் துண்டுகளை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை அரைத்த ஜாரில் பிழிந்து விடுங்கள்.அவ்வளவு தான் பல வித தலைவலியை போக்கும் அற்புத சாறு தயார்.
இந்த சாற்றை ஒரு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பருகி வந்தால் தலைவலி,தலைபாரம்,தலையில் நீர்கோர்த்தல் போன்ற பாதிப்புகள் நிரந்தரமாக குணமாகும்.