இந்த பூச்சி விரட்டி செடியில் உள்ள புழு பூச்சை நிமிடத்தில் தும்சம் செய்து விடும்!!

0
200
#image_title

இந்த பூச்சி விரட்டி செடியில் உள்ள புழு பூச்சை நிமிடத்தில் தும்சம் செய்து விடும்!!

நீங்கள் வளர்க்கும் செடியில் பூச்சி,புழு தென்பட்டால் ஆர்கானிக் பூச்சி விரட்டி தயாரித்து பயன்படுத்துங்கள்.இந்த பூச்சி விரட்டி செய்வது மிகவும் சுலபமே.இயற்கை விவசாயத்தில் இந்த பூச்சி விரட்டி முக்கிய பங்கு வகிக்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)நாட்டு மாட்டு கோமியம்
2)வேப்பிலை
3)புளித்த மோர்
4)நாட்டு மாட்டு சாணம்

செய்முறை:-

ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியம் ஊற்றிக் கொள்ளவும்.அதன் பின்னர் 1 கிலோ வேப்பிலையை உரலில் போட்டு இடித்து விழுதாக்கி நாட்டு மாட்டு கோமியத்தில் சேர்த்து ஒரு கம்பு கொண்டு கலந்து விடவும்.

அதன் பின்னர் 3 லிட்டர் நன்கு புளிக்க வைக்கப்பட்ட மோர் மற்றும் 5 கிலோ நாட்டு மாட்டு சாணம் சேர்த்து கெட்டிப்படாமல் கலக்கி விடவும்.

பிறகு ட்ரம்மை நிழலில் வைத்து ஒரு காட்டன் துணியால் மூடி விடவும்.இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கலக்கி விடவும்.ஒரு வாரம் கழித்து பார்த்தால் ஆர்கானிக் பூச்சி விரட்டி தயாராக இருக்கும்.

10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி அளவு தயாரித்த பூச்சி விரட்டியை ஊற்றி செடிகளின் மீது ஸ்ப்ரே செய்தால் தண்டை துளைக்கும் பூச்சி,இலை பூச்சி,காய்ப்புழு,அசுவினி,வெள்ளை பூச்சி அனைத்தும் நீங்கி செடி ஆரோக்கியமாக இருக்கும்.