Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீராத முதுகு வலியை சட்டுனு விரட்டும் பானம் இது..!

#image_title

தீராத முதுகு வலியை சட்டுனு விரட்டும் பானம் இது..!

முதுகு வலி முதுமை காலத்தில் ஏற்படும் ஒரு பாதிப்பாக இருந்த காலம் போய்… சிறுவர்கள், இளைஞர்கள் சந்திக்கும் பாதிப்பாக உருவெடுத்து விட்டது. இந்த முதுகு வலி இளம் தலைமுறைக்கு ஏற்பட முக்கிய காரணம்.. நீண்ட நேரம் அவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, படிப்பது போன்ற செயல்கள் செய்வதால் தான்.

இதை குணமாக்க வீட்டு முறையில் அசத்தல் தீர்வு இதோ…

1)சீரகம்
2)வெந்தயம்
3)மிளகு
4)கஞ்சி நீர்
5)உப்பு
6)தேன்

செய்முறை…

சாதம் வடித்த பின்னர் கிடைக்கும் கஞ்சி நீரை வைத்து முதுகு வலியை போக்கும் பானம் தயாரிக்கும் முறையை பார்ப்போம்.

ஒரு கிண்ணத்தில் சாதம் வடித்து ஆறவைத்த கஞ்சி நீர் எடுத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் மிளகு மற்றும் 1/4 ஸ்பூன் வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுத்து ஆற விடவும்.

பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். உரலில் போட்டு இடித்து பயன்படுத்தினால் இன்னும் நல்லது.

இந்த பொடியை கஞ்சி நீரில் போட்டு கலக்கவும். அடுத்து அதில் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

பிறகு அதில் 1 ஸ்பூன் அளவு தேன் கலந்து குடிக்கவும். இந்த கஞ்சி பானம் தீராத முது வலியை எளிதில் குணமாக்கிவிடும்.

Exit mobile version