ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களில் இது கட்டாயம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய சுகாதாரத்துறை!!

0
237
#image_title

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களில் இது கட்டாயம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய சுகாதாரத்துறை!

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் வாசகங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரையரங்குகளில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக தணிக்கை சான்றிதல் பெற வேண்டும். அவ்வாறு திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதல் பெறுவதில் பல விதிமுறைகள் உள்ளது. திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதல் பெறுவதற்கு புகைப்பிடித்தல், மதுபானங்கள் உபயோகித்தல் போன்ற காட்சிகளுக்கு எச்சரிக்கை வாசகம் இருக்க வேண்டும்.

ஆனால் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதல் பெற் வேண்டிய கட்டாயம் இல்லை. அது போலவே ஓடிடியில் வெளியாகும் இணையத் தொடர்களுக்கும் தணிக்கை சான்றிதல் கட்டாயம் இல்லை.

இந்த நிலையில் இனிமேல் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருள்கள் வரும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம் பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இப்த உத்தரவை மீறும் படக்குழு மீது மத்திய சுகாதாரம் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.