அரசு விழாக்களில் கண்டிப்பாக இனி இது இப்படித்தான் இடம்பெறும்! அறிவித்த திடீர் உத்தரவு!
சமீப காலங்களில் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட ஒளி கருவிகள் மூலமே இசைக்கப்படுகிறது. அதனால் விழாவில் பங்கேற்போர் யாரும் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கும் போது உதட்டளவில் கூட யாரும் பாடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் காரணமாக யாருக்கும் எந்தவித தேசப்பற்று அல்லது தமிழ் உணர்வும் இல்லாமல் இயந்திர கதியில் எழுந்து நிற்பதாகவும், எந்த நோக்கத்திற்காக தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறது என்பதே தெரியாமல் எழுந்து நிற்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அந்த நோக்கம் சிதைந்து போவதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் அனைத்து அரசு விழாக்களிலும் பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் இதற்கென தனியாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பாடுவதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறும் கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.