8 ஆண்டுகளாக வெளிவராத படம்! பீம்சிங் சிவாஜி முதல் படம்!

0
315
#image_title

பீம் சிங்கின் முதல் படம் அம்மையப்பன் 1954 இல் வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு முன்னரே சிவாஜி மற்றும் பத்மினியை வைத்து பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த செந்தாமரை என்ற படத்தை தான் முதல் முதல் இயக்கினார் பீம்சிங்!

 

இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பத்மினி லலிதா ராகினி சந்திரபாபு கே ஆர் ராமசாமி ஆகியோர் அனைவரும் நடித்திருப்பார்கள்.

 

இந்தப் படம் 8 ஆண்டுகள் கழித்து 1962 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படப்பிடிப்பின் பொழுது தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி ஃபிலிம் ரோல்கள் எறிந்து விட்டதாகவும் அதனால் குழப்பமான மீதி ரோல்களை கொண்டு வெளியான கதை சரியாக ஓடவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

 

வெறும் 42 நாட்களை இந்த படம் ஓடியுள்ளது. இதில் விகே ராமசாமி நான் பாட மாட்டேன் நான் பாட மாட்டேன் என்ற ஒரு பாடலை பாடியிருந்தார். இவர் பாடிய முதல் பாடலும் அதுதான் கடைசி பாடலும் அதுதான். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் பாடவில்லை.

 

சந்திரபாபு இந்த படத்தில் தாங்காதம்மா தாங்காது என்ற ஒரு பாடலை ஜமுனாராணியுடன் சேர்ந்து பாடியுள்ளார்.

 

இந்த படத்தின் கதை ஒரு சோக மிகுந்த கதையாகவே இருக்கும். இதில் பத்மினி அவர்களின் தங்கை மற்றும் அக்கா ராகினி லலிதா பத்மினி மூன்று பேரும் இணைந்து நடித்த படம் இது.

 

 

கமலா நயவஞ்சகர்களின் பிடியில் சிக்கி செந்தாமரை என்ற ஒரு பெண்ணை பெற்றெடுப்பாள். கமலாவின் காதலனுக்கு பைத்தியம் பிடிக்கும். கமலாவின் தம்பி இலங்கைக்கு அனுப்பி வைக்கபடுவார். இப்படி வாழ்க்கையே விரக்தியில் போகும் கமலா தற்கொலை செய்ய முயல்வாள். பெரியவர் ஒருவர் காப்பாற்றுவார். அவளிடம் கமலா தான் தனது தாய் என்ற உண்மையை செந்தாமரைக்கு சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருப்பார். இலங்கையிலிருந்து திரும்பும் கமலாவின் தம்பிக்கும் செந்தாமரைக்கும் இடையே காதல் மலர்கிறது.

எப்படி கமலா தான் தனது தாய் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறாள். இருவரும் எப்படி இணைகிறார்கள் என்ற சோக கதை தான் இது.

 

இந்த கதையை மிகவும் குழப்பமான ஒரு கதையாக எடுத்ததால் இந்த படம் ஓடவில்லை.