நடிகர் மாதவன் ஒரு இயக்குனராக இப்படித்தான் இருந்தார்!! அவரின் திறமை குறித்து கூறும் ஆர். மித்ரன்!!

0
82
This is how actor Madhavan was as a director!! Speaking about his talent, R. Mithran!!

“90ஸ் கிட்ஸின் காதல் நாயகனான ‘மாதவன்’ நடிகர், தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சிறந்து விளங்குபவர். இவர் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் ‘அலைபாயுதே’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானவர். இப்படத்தில் இவரின் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். இப்படத்தை தொடர்ந்து “மின்னலே, டும் டும் டும்” ஆகிய காதல் கதைகளில் நடித்து வந்தார்.

‘ராக்கெட்ரி’ என்ற படத்தில் இயக்குனராக பணிபுரிய தொடங்கினார். இவரை இயக்கி, நடித்த இப்படமானது தமிழ்,இந்தி மலையாளம், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இவரின் இயக்குனர் திறமை பற்றி “இயக்குனர் மித்ரன் ஆர். ஜவஹர் கூறுகையில்,

‘ராக்கெட்ரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவருக்கு படத்தை இயக்குவதிலும் ஆர்வம் வந்தது”. இவர் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். “இத்தலைமுறையினருக்கு என்ன பிடிக்கும் என தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்”. ஒவ்வொரு ‘வேலைகளையும் அவ்வளவு ஈடுபாட்டோடு செய்வார்’ என்றார். மேலும் இவரை ‘குட்டி கமல்’ என்றும் அழைக்கலாம்.

“கமல் சாரிடம் கதை கூறும்போது, ஒரு விஷயத்தைப் பற்றி எவ்வாறு எடுத்துரைப்பாரோ, அதேபோல் இவருக்கும் அந்த திறமை உண்டு” என பெருமிதம் தெரிவித்துள்ளார் மித்ரன்.எனினும் நடிகர் “மாதவன் தனக்கு நடிகனாக இருப்பதற்கே ஆர்வம் என்று ‘ராக்கெட்ரி’ பட வெளியீட்டின் போது கூறியிருந்தார்” என்பதும் குறிப்பிடத்தக்கது.