பண விஷயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும்!! நடிகர் அஜித் குறித்து இயக்குனர் விளக்கம்!!

0
111

2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹச் வினோத். இவர் நடிகர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் தற்பொழுது நடிகர் அஜித்குமாரின் சிகரெட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு.

 

அஜீத்குமார் குறித்து இயக்குனர் எச் வினோத் அந்த நேர்காணலில் கூறியதாவது :-

 

அஜித் குமார் அவர்கள், அவரது அக்கவுண்ட்ஸை அவரேதான் பார்த்துக்கொள்வார். அவரது அக்கவுண்ட்ஸை அவரே அழகாக மேனேஜ் பண்ணுவார். அவரது பைனான்ஸை அவரே பார்த்துக்கொள்கிற ஒரு பிரமாதமான அக்கவுண்டன்ட் ஆக அவர் இருக்கிறார் என்று இயக்குனர் எச் வினோத் அவர்கள் கூறியிருக்கிறார்.

 

பொதுவாக நடிகர் அஜித்தின் அட்வைஸ் :-

 

உங்களுடைய வருமானத்தை சரியாக கையாள வேண்டும். நீங்கள் வருமான வரி கட்டுபவராக இருந்தால், உங்களுக்கு வரும் வருமானத்தில், கட்ட வேண்டிய பணத்தை தனியாக வங்கி கணக்கில் போட்டு வைத்து விடுங்கள். அந்த பணம் உங்களுடையது இல்லை என்ற எண்ணத்தில், அதை வங்கியில் போட்டு விடுங்கள்.உங்களுக்கு எந்தவிதமான வருத்தமும் இருக்காது. அதை ஏமாத்தலாமா, தப்புக்கணக்கு காட்டலாமா என்ற எந்த எண்ணமும் வராது.

 

அதுபோக மீதி இருக்கிற பணத்தில் 10 சதவீதம் எடுத்து சாரிட்டிக்கு என்று வைத்து விடுங்கள். நீங்கள் கண்டிப்பாக வசதியாக இருக்கும் போது 4 பேருக்கு உதவிகள் செய்யலாம்.

உதவி என்று கேட்டு வரும் சரியான நபர்களுக்கு அந்த பணத்தை கொடுத்து உதவ, அந்த பணத்தை இப்போதே எடுத்து வைத்து விடுங்கள்.

 

அதுபோக மீதி பணம் தான் உங்களுடையது. அதை வைத்து உங்களது தேவைகள், ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். மத்த விஷயங்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்த திட்டமிட்டுக் கொள்ளலாம். இப்படி செய்வதால் உங்களுக்கு எந்தவிதமான குழப்பமும் இருக்காது. லாங் ஸ்டெப் வைத்து மாட்டிக்கவும் மாட்டோம். சரியாக பணத்தை செலவு செய்ய தெரியாமல் முழிக்கவும் மாட்டோம்.

 

இதுவே நடிகர் அஜித்குமார் அனைவருக்கும் பணம் குறித்து வழங்கக்கூடிய அட்வைஸ் என்று இயக்குனர் எச் வினோத் தெரிவித்திருக்கிறார்.மேலும் இது நடிகர் அஜித்தின் உடைய ரசிகர்களுடைய பெரிதும் பகிரப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.