Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணம் எப்படியோ அப்படித்தானே இதுவும்! எல்லா உரிமையும் உள்ளது – பிரபல நடிகை!

This is how marriage is somehow! All rights reserved - Famous Actress!

This is how marriage is somehow! All rights reserved - Famous Actress!

திருமணம் எப்படியோ அப்படித்தானே இதுவும்! எல்லா உரிமையும் உள்ளது – பிரபல நடிகை!

தமிழில் கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, சோக்காலி, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சுவாசிகா. இவர் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கேரளாவில் தற்போது வரதட்சணைக் கொடுமைகள் அதிகம் நடப்பதாக நாளுக்கு நாள் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளதால், அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார்.

திருமண வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கும் பெண்கள் சமூகம் என்ன நினைக்கும் என்றும்,  அவர்களின் பயம் மற்றும் குடும்பம் போன்ற பல காரணங்களால் எந்த முடிவையும் சுயமாக எடுக்காமல் உள்ளனர். சமுதாயம் பெண்களை அப்படியே வளர்த்து விட்டது. நான் திருமணம் செய்து கொள்ளும் போது இந்த மாதிரி பிரச்சினைகள் ஏற்பட்டால் அதைத் தீர்க்க முடிந்தவரை முயற்சி செய்வேன். என்னையும் மீறி நிலைமை கை மீறிப் போனால் விவாகரத்து பற்றி யோசிப்பேன்.

மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது பயங்கரமானது. அதைவிட விவாகரத்து எவ்வளவோ மேல். இரண்டு பேர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ திருமணம் செய்து கொள்கிறார்கள். தாங்க முடியாத பிரச்சினைகள் அவர்களுக்குள் வரும் போது விவாகரத்து செய்து கொள்வது உத்தமமான ஒன்று தான். உயிர்களை மாய்காத ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

விவாகரத்தும் திருமணம் போன்றே புனிதமானது தான் அது ஒரு பாவச்செயல் அல்ல. இதை பெண்கள் அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் அது ஒரு புதிய வாழ்க்கைக்கான வாய்ப்பைப் உங்களுக்கு வழங்குகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். பெண்கள் தங்களை மோசமாக நடத்த திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை ஆண்கள் புரிந்து கொண்டாலே, பிரச்சினைகள் எதுவும் வரத்து. அப்படி பிரச்சனைகள் வந்தால் அல்லது வரும்போது சரியான முடிவை அவர்கள் எடுக்க வேண்டும் என்று, பெண்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் பேட்டியில் கூறினார்.

Exit mobile version