வெள்ளைப்படுதலை முற்றிலும் சரி செய்ய வெண்டைக்காயை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
179
This is how to use amaranth to fix whitening completely!!

பெண்களின் பிறப்புறுப்பில் வெள்ளை நிறத்தில் சுரக்கும் திரவம் வெள்ளைப்படுதல் என்று அழைக்கப்படுகிறது.இது பருவப் பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும்.பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவம் அப்பகுதியை ஈரப்பதத்துடன் வைக்கிறது.இதனால் கிருமி தொற்று,கடுமையான துர்நற்றம் போன்றவை ஏற்படுகிறது.அதிகளவு வெள்ளைப்படுதல் பிரச்சனையை சந்தித்து வரும் பெண்கள் சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி அதை கட்டுப்படுத்தலாம்.

வீட்டு வைத்தியம் 01:

1)நெல்லிக்காய் பொடி
2)தேன்

ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியில் சிறிது தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வீட்டு வைத்தியம் 02:

1)வெண்டைக்காய்
2)தேன்

இரண்டு வெண்டைக்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.இதை ஒரு கப் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வீட்டு வைத்தியம் 03:

1)பால்
2)மஞ்சள் தூள்
3)பனங்கற்கண்டு

ஒரு டம்ளர் சூடான பாலில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வீட்டு வைத்தியம் 04:

1)வடித்த சாதம்
2)தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு வடித்த சாதம் மற்றும் தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரத்திற்கு ஊற விடவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வீட்டு வைத்தியம் 05:

1)அன்னாசிப் பூ
2)தண்ணீர்
3)தேன்

150 மில்லி தண்ணீரில் ஒரு அன்னாசிப் பூ சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து வடித்து தேன் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் நிற்கும்.

வீட்டு வைத்தியம் 06:

1)வாழைப்பழம்
2)நெய்

நன்கு கனிந்த வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நிற்கும்.