பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய ஆதங்கத்தை இப்படித்தான் காட்டுவர்!! லப்பர் பந்து இயக்குனர்!!

0
83
This is how victims show their anxiety!! Rubber Ball Director!!

”2024 ஆம் ஆண்டு வெளிவந்த ‘லப்பர் பந்து’ படம் இயக்கியவர் தான் ‘தமிழரசன் பச்சமுத்து”. இவர் ஆரம்ப காலகட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து இருந்தார். இப்படத்தின் வசனத்திற்காக”ஆனந்த விகடன் விருது” பெற்றார். அதைத்தொடர்ந்து ‘கனா’ திரைப்படத்திலும் உதவி இயக்குனராக செயல்பட்டு வந்தார். இவர் தனியே படம் பண்ண வேண்டும் என்று பல தயாரிப்பாளர்களை நாடி உள்ளார். இறுதியில் தான் ‘லப்பர் பந்து’ கதை ஓகே ஆனது.

லப்பர் பந்து:

இப்படம் “அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகிய நடிகர்களின் எதார்த்தமான நடிப்பை கொண்டு வெளியானது”. “டைம்ஸ் ஆப் இந்தியா இப்படத்தின் திரைவிமர்சனத்தை,2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் என மென்ஷன் செய்துள்ளது”. ‘கிராமத்தில் நடக்கும் ஜாதி ஏற்றத்தாழ்வு குறித்தும், பெண் ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதால் ஏற்படும் ஏச்சுப் பேச்சு குறித்தும் இப்படத்தில் அழகாக வெளி காட்டி இருப்பார்’. இவர் பட இயக்கத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் தனது காவலர் வேலையை விட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பல இயக்குனர்களிடம் பணிபுரிந்து வந்ததால், சிறு சிறு விஷயங்களையும் கவனமாக செய்வேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். குறிப்பாக ரஞ்சித்,மாரி செல்வராஜ் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள். பாதிக்கப்பட்டவங்களோட ஸ்டேட்மென்ட்ஸ் கண்டிப்பாக கோபமாக தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.