பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

0
223

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.பிப்ரவரி மாதம் நடக்கும் செய்முறை தேர்வுக்கும் மார்ச் மாதம் தொடங்கும் பொது தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வரும் நிலையில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என்று பள்ளி கல்வித்துறையானது,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அந்த சுற்று அறிக்கையில் கூறியுள்ளதவாறு:

பொதுத்தேர்வு எழுதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கை விண்ணப்பிக்கும் போதும், “நான் முதல்வன்” திட்டத்தை அமல்படுத்தும் போதும் மின்னஞ்சல் முகவரி கட்டாயமாக தேவைப்படுகிறது.

எனவே அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு வருகின்ற ஜனவரி 9-ம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டுமென்றும் இந்த பணியினை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிக்க வேண்டுமென்றும் பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

இது மட்டுமென்றி மின்னஞ்சல் முகவரியை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான பயிற்சி அளிக்க வேண்டும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பொது தேர்வு எழுதும் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் தங்களுக்கான புதிய மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.