Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது கட்டாயம்.. இல்லையென்றால் அப்படியே இரயிலிலிருந்து இறக்கி விடலாம்!! வரப்போகும் புதிய விதிமுறை!! 

This is mandatory.. otherwise you can drop it from the train!! New rule to come!!

This is mandatory.. otherwise you can drop it from the train!! New rule to come!!

 

இது கட்டாயம்.. இல்லையென்றால் அப்படியே இரயிலிலிருந்து இறக்கி விடலாம்!! வரப்போகும் புதிய விதிமுறை!!

சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்யாத பயணிகள் பலரும் அந்தப் பெட்டியை சூழ்ந்து விட்டனர்.இதனால் முன்பதிவு செய்த பயணிகளால் நுழைய கூட முடியவில்லை. பின்பு இவர்கள் மாத்திரையில் செல்ல வேண்டி நேரிட்டது.இதன் வீடியோ வைரலானதை அடுத்து இந்த விவகாரம் மத்திய ரயில்வே அமைச்சர் பார்வைக்கு சென்றது. உடனடியாக மத்திய அமைச்சர் தென் ரயில்வே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் ஆலோசனையில், யாரெல்லாம் முன்பதிவு செய்யாமல் அந்தப் பெட்டிகளில் ஏறுகிறார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.அதேபோல முன்பதிவு பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கணக்கில் எடுத்து அதற்கு ஏற்றார் போல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் முன்பதிவு பெட்டிகளில் அதிகப்படியான ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் டிடிஆர் உள்ளிட்டவர்களை நியமிக்க வேண்டும்.இதனை மீறியும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்பவர்களை அடுத்த நிறுத்தத்திலேயே இறக்கி விட வேண்டும் இன்று இந்த ஆலோசனையை பேசி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.அதேபோல பெரும்பாலான வட மாநிலத்திற்கு செல்லும் ரயில்களிலும் வட மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் ரயில்களிலும் அதிகளவு இது நடப்பதாக கூறுகின்றனர்.

தென் தமிழக இரயில்களில் இவ்வாறு நடக்கும் படசத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் இவ்வாறான புகார்கள் இங்கு குறைந்த அளவில் வருவதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version