மோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா?
இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்கள் பல உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.பல உறவுகளை இழந்த பிறகு தான் மக்கள் அதிகப்படியாக விழிப்புணர்வுடன் காணப்படுகின்றனர்.தற்பொழுது மக்கள் கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மீண்டு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகப்படியான மக்கள் ஆக்ஸிஜன் இன்றியும்,மருத்து வசதிகள் இன்றியும் காணப்பட்டனர்.அப்பொழுது பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாடு முழுவதும் ஆக்சிஜன் திட்டத்தை மேம்படுத்துமாறு கூறினார்.
அத்திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகின்றனர்.நாடுமுழுவதும் 1500 ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதற்கு தற்போது திட்டம் தயாராகி வருகிறது.இந்த திட்டமானது தற்போது எந்த நிலையில் உள்ளது என்று பிரதமர் நேரேந்திர மோடி ஆய்வு செய்து வருகிறார்.இந்த ஆக்சிஜன் திட்டமானது பிரதமரின் நல நிதி மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் அத்தோடு பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்து இந்த ஆக்சிஜன் ஆலைக்கு தங்களின் பங்களிப்பை தந்துள்ளனர்.இவர்களின் பங்களிப்பையும் சேர்த்து மொத்தம் 1500 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்படும் என நரேந்திரமோடி கூறினார்.
பிரதமரின் நல நிதியில் இருந்து வரும் ஆக்சிஜன் ஆலைகள் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு உட்பட்டது என்று கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி அந்த ஆக்சிஜன் செயல்பாட்டிற்கு வந்தால் அதனை பயன்படுத்தி நான்கு லட்சம் ஆக்சிஜன் வரை விநியோகம் செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்த ஆலை நடைமுறைக்கு வருவதற்கு அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.ஆக்சிஜன் ஆலைகள் மாநிலங்களில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை கேட்டறிவதற்கு மாநிலங்களில் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக ஆக்ஸிஜன் ஆலை அதிகாரிகள் மோடியிடம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு ஆக்சிஜன் ஆலையின் செயல்பாடு மற்று பராமரிப்பு போன்றவற்றை தெரிந்துக்கொள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.அதனையடுத்து ஆக்சிஜன் ஆலை பராமரிப்பு குறித்து பயிற்சிக்காக நாடு முழுவது 8000 பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஓரிரு மாதங்களில் இந்த திட்டம் அமலுக்கு அவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.