Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தா நெல்சன் வச்சிக்கோ இது என்னோட கிப்ட்!! ரஜினிக்கு கார் வழங்கிய கலாநிதி மாறன் இவருக்கு என்ன கொடுத்தார் தெரியுமா?

இந்தா நெல்சன் வச்சிக்கோ இது என்னோட கிப்ட்!! ரஜினிக்கு கார் வழங்கிய கலாநிதி மாறன் இவருக்கு என்ன கொடுத்தார் தெரியுமா?

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான படம் ஜெயிலர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,தமன்னா,யோகி பாபு,வசந்த ரவி,மோகன்லால்,சுனில், சிவராஜ்குமார்,ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசான இப்படம் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 375 கோடி வசூல் செய்து இந்திய திரையுலகில் சாதனை செய்தது.இதனை தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முடிவில் மொத்தம் 525 கோடியை வாரி குவித்தது.தற்பொழுது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் 600 கோடி வசூலை தொட்டு விட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில் படம் மாபெரும் வெற்றி பெற்றதால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் வெற்றிக்கு காரணமான ஜெயிலர் படத்தின் ஹீரோ ரஜினிகாந்திற்கு மிகவும் விலையுயர்ந்த சொகுசு கார் என்று சொல்லப்படும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை நேற்று பரிசாக வழங்கினார்.இந்த காரின் விலை இந்திய மதிப்பிற்கு ரூ.1.40 கோடிக்கும் மேல் ஆகும்.

இந்நிலையில் இன்று படத்தின் இயக்குநர் நெல்சன் அவர்களை சன் டிவி அலுவலகத்திற்கு அழைத்த கலாநிதி மாறன் அவருக்கு காசோலையை வழங்கியதோடு புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக அளித்துள்ளார்.இந்த மாடலின் விலை ரூ.1.40 கோடிக்கும் மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Exit mobile version