‘என் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட் இது தான்’! கமல் சொன்ன ரகசியத்திற்கு ரசிகர்களின் ரியாக்சன்!

0
144

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஷோ தான் பிக் பாஸ். இதில் நடிகர் கமல்ஹாசன் வார இறுதி நாட்களில் மட்டுமே பங்கு கொள்வார்.

இதுவரை இருந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனின் முதல் வாரத்திலேயே பல திருப்பங்கள் நடைபெற்றதால் அது பற்றி கமல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹவுஸ் மெட்களுடன் உரையாடினார்.

அவ்வாறு கமல் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய காலை உணவை பற்றி அவர் கூறியிருக்கும் தகவல் அனைவரையும் ஷாக்  ஆக்கியுள்ளது.

மேலும் இந்த வாரத்தின் பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்திக்கு கமல் அட்வைஸ் கொடுக்கும் பொழுது உணவை வீணாக்கக் கூடாது என்பதை மெயின் பாயிண்ட்டாக கூறியிருந்தார்.

அதன் பின் பேசிய கமல், “சில நிஜங்கள் புரிய தாமதமாகும். சாப்பிடும் சாப்பாடு பழையது என சொல்வார்கள். அதை சாப்பிடுவது அபூர்வம். சமீபத்தில் இருந்து என்னுடைய காலை உணவு பழையது தான். அதை சாப்பிட்டு விட்டு உயிர் வாழ முடியும் என்றால் சாப்பிடலாமே!” என்று கூறியுள்ளார்.

மேலும் சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் அதிக அளவு உணவுப் பொருட்கள் வீணாக்கபட்டதால் தற்போது இந்த மாதிரியான அட்வைஸை பிக் பாஸ் போட்டியின் பங்கேற்பாளர்களுக்கு கொடுத்திருக்கிறார் கமல்.