Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் வித்தை இங்கே பலிக்காது ! ஸ்டாலின் கடும் தாக்கு !

கொள்ளை கூட்டத்திற்க்கும் அவர்களை காப்பாற்ற முயற்சிக்கும் பாஜகவுக்கும் பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்றன அறிக்கையில், புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது சென்னையில் பல தொகுதிகளுக்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டேன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினேன்.

திருநெல்வேலி தென்காசி ஆகிய மாவட்டங்களில் புயலின் பாதிப்பு இல்லை ஆனாலும் சுமார் 13 மாவட்டங்கள் இந்த புயலால் பாதிப்புக்கு உள்ளாகிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாவட்டங்களை சார்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

திருநெல்வேலியில் இன்றைய தினம் தமிழகம் மீட்போம் என்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. சோழர் ஆட்சியாக இருந்தாலும் சரி, விஜயநகர பேரரசு ஆட்சியாக இருந்தாலும் சரி, பாண்டியர் ஆட்சியாக இருந்தாலும் சரி, அல்லது பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும் சரி எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்த ஆட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருந்த ஒரு தான் இந்த நெல்லை மாவட்டம்.

இயற்கையும் அமைதியான சூழலும் பெற்ற இந்த நெல்லை மாவட்டம் கழகத்தின் நிர்வாக வசதிக்காக நெல்லை, தென்காசி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டிருக்கிறார், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக அப்துல் வகாப் நியமிக்கப்பட்டிருக்கிறார், அதேபோல தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக சிவ பத்மநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றார், தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக துரை நியமிக்கப்பட்டு இருக்கின்றார். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த பொறுப்பாளர்களில் துரை மட்டும்தான் பொறுப்புக்கு புதிதாக வந்தவர் மற்றவர் அனைவருமே ஏற்கனவே மாவட்ட பணிகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் தான் நிர்வாக வசதிக்காக பொறுப்புகளை பரவலாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக புதிய மாவட்டங்களாக உருவாக்கினாலும் உங்களுடைய செயல்பாடுகளும் ஒரே நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் அது கழகத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றி என்ற பாதையில் அந்த இலக்கை நோக்கி பயணியுங்கள்.

திமுகவை எதிர்ப்பதன் மூலம் தமிழக மக்களுடைய வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள் திமுகவை அழித்து விட்டால் தமிழர்களை வீழ்த்துவது எளிதான காரியம் என்று நினைக்கிறார்கள். இந்த தமிழின விரோத அரசியல் கூட்டத்திற்கு பாடம் புகட்ட வேண்டிய கடமை இந்த தேர்தலில் தமிழக மக்களுக்கு இருக்கின்றது.

சென்ற 22 ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் பேச்சை நான் பத்திரிகைகளில் பார்த்தேன் என்ன சிவாஜி இறந்துவிட்டாரா என கேட்பது போல அவருடைய பேச்சு இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி என்ன சாதனைகள் செய்தது அதை பட்டியலிட தயாரா என்று அமித்ஷா கேள்வி எழுப்புகின்றார். அவர் இந்தியாவில்தான் இருக்கின்றாரா? அல்லது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேற்றுகிரகத்தில் இருந்து குதித்து விட்டாரா என்று தெரியவில்லை.

ஒரு தெருவில் நின்று நாங்கள் செய்த சாதனைகளை தெரிவிப்பதற்கு தயார் என அவர் தெரிவித்திருக்கின்றார். அமித்ஷா ஒரு மத்திய உள்துறை அமைச்சர் ஆகவே அவரை தெருவிற்கு அழைப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. பாஜக ஆட்சியில் தமிழ் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகள் புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் தொழிற்சாலைகள் ஆகியவை என்ன என்ற பட்டியலை வெளியிடுங்கள் அதன் பிறகு பேசிக் கொள்ளலாம்.

அமித்ஷா என்றால் அனைத்தும் அறிந்தவர் அவர் ஒரு சாணக்கியர் அவருக்கு அனைத்து மாநிலங்களும் அத்துப்படி என ஊடகங்கள் அவரை பெரிதாக காட்டுகின்றன. அவருக்கு திமுக எந்த மாதிரியான அரசியல் கட்சி என்று தெரியவில்லை 70 வருட கால இயக்கம் இது 50 வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டின் ஆட்சி கட்டிலை அலங்கரித்த இயக்கம் திமுக ஒருமுறை அல்ல ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட இயக்கம் தமிழக சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களை வைத்திருக்கும் ஒரு இயக்கம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி திமுக தான் என்று தெரிவித்தார்.

இதுபோன்ற எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஏதோ மந்திரவாதியை போல ஒரே நாளில் என்ன செய்கிறேன் பார் என வித்தை காண்பிக்க இது வடமாநிலம் கிடையாது இது தமிழகம் என்பதை திமுகவின் தொண்டனாக அவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Exit mobile version