Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்! பாஜக பட்டியலின அணி தலைவர் குமுறல்!

தென்காசி தனித் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் வேலை நிமித்தமாக அமைச்சர் ராமச்சந்திரனை சந்திக்க சென்றார். அப்போது அமைச்சர் ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்தார் என சொல்லப்படுகிறது. அதோடு தனுஷ் குமாரை நிக்க வைத்தபடியே உரையாற்றினார் எனவும் சொல்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல அண்மையில் நிகழ்ச்சியொன்றில் அமைச்சர் பொன்முடி திமுகவைச் சார்ந்த பட்டியலின ஒன்றிய பெண் தலைவரை காட்டி இதை பாரு இங்கே உட்கார்ந்திருக்கிற பொம்பள தலித் இனத்தை ச் சார்ந்தது தான் திமுக ஆட்சியில சமூக நீதி நிலைநாட்டப் படலைன்னு சொல்றாங்க.சமூக நீதி நிலைநாட்டப் பட்டதற்கு சாட்சி தான் இந்த பொம்பள இங்க உட்கார்ந்திருக்கிறது.

இதுதான் திராவிட மாடல் ஆட்சி என பேசினார். இது தொடர்பாக தமிழக பாஜகவின் பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமி தெரிவித்ததாவது, தலித்களுக்கு விரோதமாக திமுகவும், அதன் அரசும் செயல்படுகிறது என்று பெரும்பாலான தலித் இன பிரதிநிதிகளும், மக்களும் வெகுகாலமாகவே கொந்தளிப்பில் இருக்கிறார்கள். நீதிபதிகளாக தலித் இன பிரதிநிதிகள் வந்துள்ளார்கள். அது திமுக போட்ட பிச்சை என்று முதல் தீயை பற்ற வைத்தவர் அந்த கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஆர் எஸ் பாரதி.

இந்த விவகாரம் உயர்நீதிமன்றம் வரையில் சென்றது. ஒரு கட்டத்தில் ஆர் எஸ் பாரதி திமுக தலைமையால் அடக்கி வைக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் தான் தலித்களை அவமதிக்கும் விதத்தில் சமீபத்தில் இரு அமைச்சர்கள் நடந்து கொண்டுள்ளார்கள். அமைச்சர் ராமச்சந்திரன் தன்னை ஒரு கடவுளாகவோ, கட்சியின் தலைவராகவோ கூட நினைத்து கொள்ளட்டும்.ஆனால் அவருடைய இல்லம் தேடி சென்றவர் அவர் கட்சியை சார்ந்த தனுஷ்குமார் என்ன தான் அவர் தலித் இனத்தைச் சார்ந்தவர் என்றாலும் கூட பல லட்சம் பேர் ஓட்டு போட்டு தேர்வு செய்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அசிங்கப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் எவ்வளவு பெரிய மோசமான செயல்? அமைச்சர் பொன்முடி அதற்கு மேலாகவும் நடந்து கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார் தடா பெரியசாமி.

திமுகவின் ஆட்சியை புகழ நினைத்த அமைச்சர் பொன்முடி மேடையில் அமர்ந்திருந்த தலித் இன பெண் ஒன்றிய தலைவரை கீழான நிலையில் பேசி இது திராவிட மாடல் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளார். தலித் மக்களை அவமானப்படுத்துவது தான் திராவிட மாடல் ஆட்சி காண லட்சணமா? இன்று தடா பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதான் தலித் இன மக்களுக்கு அவர்கள் வழங்கும் மரியாதை. தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கிவிட்டு யாசகம் கொடுத்ததை போல பேசுவது தலித் மக்களை மேலும் அவமானப்படுத்துவதை போன்றது தான் என தெரிவித்துள்ளார்.

தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்ட உரிமை. அதனை நிறைவு செய்ய வேண்டியது ஒவ்வொரு அரசியல் கட்சியின் கடமை, அதனை செய்துவிட்டு சமூக நீதி என்பது போல திமுக தொடர்ந்து பேசி வருகிறது கேடித்தனத்தின் உச்சம் எனக் கூறியிருக்கிறார் தடா பெரியசாமி.தலித் இன மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இப்படி நாடகமாடும் திமுக தலைமை, தலித் மக்களை கேவலமாக பேசுபவர்கள், நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அதற்கான சரியான பதிலடி கிடைக்கும். மிக விரைவில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் 2 அமைச்சர்கள் மீதும் புகார் வழங்கப் போகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version