Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களே உங்களுக்கான சிறந்த பழம் இதுதான்! புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது!

பெண்களே உங்களுக்கான சிறந்த பழம் இதுதான்! புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது!

முலாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

கோடை காலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் முலாம்பழம் ஆகும் .இதில் அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. முலாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி,இ,கே,சோடியம் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளது.

முலாம்பழம் உடல் சூட்டை தணிக்கும் முதன்மை மருந்தாகவும் உதவுகிறது. பொதுவாக வெயில் காலங்களில் உடலின் வெப்பம் அதிகரித்து வயிற்று வலி, சிறுநீர் எரிச்சல் தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்க உதவுகிறது.

செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. வயிற்றில் உள்ள அமிலங்களை சமநிலைப்படுத்தி மற்றும் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை எளிதில் செரிமானம் அடைவதற்கும் உதவுகிறது. அல்சர் பிரச்சனையினால் அவதிப்பட கூடியவர்கள் தினந்தோறும் எடுத்துக் கொள்வது நல்லதாகும்.

புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. பைட்டோ கெமிக்கல் அதிகம் இருப்பதால் புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களை அழித்து மணக்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்று நோய்கள் வராமல் உதவுகிறது . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகப்படியாகவே முலாம் பழத்தில் அடங்கியுள்ளது.

இதனை சாப்பிட்டு வர இதில் உள்ள பைட்டோ கெமிக்கல் உலோகம் காரணமாக ரத்தத்தின் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தினால் அவதிப்படக்கூடியவர்கள் முலாம் பழத்தை சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் குறைகிறது.

இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான பொட்டாசியம் ரத்த நாளங்களில் உள்ள ஆற்றலையும் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாக உள்ள சோடியம் உப்பையும் குறைக்க கூடியதாகவும் உதவுகிறது.

 

Exit mobile version