Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான் கேட்ட கதைகளில் இது தான் சிறந்தது!! இயக்குநர் செல்வராகவன் பதிவு!!

Indian 2, actor Shankar, final work done, actor Kamal Haasan

Indian 2, actor Shankar, final work done, actor Kamal Haasan

நான் கேட்ட கதைகளில் இது தான் சிறந்தது!! இயக்குநர் செல்வராகவன் பதிவு!!
பிரபல இயக்குநர் செல்வராகவன் அவர்கள் நேற்று அதாவது மே 12ம் தேதி வெளியான பர்ஹானா திரைப்படத்தை பற்றி புகழ்ந்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதை அவருடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் நடிப்பில் மே 12ம் தேதி பர்ஹானா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்தின் கதை மிகவும் சிறந்த கதை என்று படத்தில் நடித்த இயக்குநர் செல்வராகவன் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான பர்ஹானா திரைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் அவர்கள் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசூரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பர்ஹானா திரைப்படம் குறித்து பதிவு செய்துள்ளார் இயக்குநர் செல்வராகவன். அந்த பதிவில் “என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் பர்ஹானா திரைப்படத்தின் கதையும் ஒன்று. இந்த கதையை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் அழகாக மாற்றியுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் இதற்கு மேலும் அழகு சேர்த்துள்ளார். இது போன்ற காவியப் படத்தில் நானும் நடித்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
Exit mobile version