Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நேற்று மட்டும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு இதுதான்!

This is the corona effect of Tamil Nadu only yesterday!

This is the corona effect of Tamil Nadu only yesterday!

நேற்று மட்டும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு இதுதான்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 47 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,360 ஆண்கள், 952 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 312 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 252 பேரும், தஞ்சாவூரில் 158 பேரும், ஈரோட்டில் 152 பேரும், சேலத்தில் 168 பேரும், சென்னையில் 144 பேரும், திருப்பூரில் 138 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் குறைந்தபட்சமாக தென்காசியில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 வயதுக்குட்பட்ட 124 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் என 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 44 லட்சத்து 7 ஆயிரத்து 643 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 79 ஆயிரத்து 4 ஆண்களும், 10 லட்சத்து 52 ஆயிரத்து 76 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 25 லட்சத்து 31 ஆயிரத்து 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 92 ஆயிரத்து 148 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 64 ஆயிரத்து 771 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 28 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 18 பேரும் என 46 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 7 பேரும், கோவை, கடலூர், திருவள்ளூரில் தலா 4 பேர் உள்பட நேற்று மட்டும் 21 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர்களில் 6 பேர் இணை நோய் அல்லாதவர்கள் என்றும், அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 33 ஆயிரத்து 652 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 39 ஆயிரத்து 546 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 16 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 271 ஐ.சி.யு படுக்கைகள் என மொத்தம் 72 ஆயிரத்து 833 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து 2,986 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 418 பேரும், சென்னையில் 142 பேரும், செங்கல்பட்டில் 187 பேரும், ஈரோட்டில் 231 பேரும், திருப்பூரில் 126 பேரும், சேலத்தில் 208 பேரும் உள்ளனர்.
இதுவரை 24 லட்சத்து 68 ஆயிரத்து 236 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 29 ஆயிரத்து 230 பேர் உள்ளனர்.
Exit mobile version