100% கொரோனா ப்ரீ மாவட்டம் இதுதானாம்! தனது உயிரை துச்சமென பணயம் வைத்த செவிலியர்கள்!

0
109
This is the district without corona! Nurses who risked her life trivially!

100% கொரோனா ப்ரீ மாவட்டம் இதுதானாம்! தனது உயிரை துச்சமென பணயம் வைத்த செவிலியர்கள்!

கரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாகியும் தற்பொழுது வரை அதன் வீரியம் காணப்படுகிறது.முதல், இரண்டாம் என ஆரம்பித்து தற்பொழுது மூன்றாவது அலை வரை சென்றுள்ளது.இவற்றை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் தற்போது மூன்றாம் அலையின்போது மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவர் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அதனை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களை தற்காலிகமாக செயல்படுவதை தவிர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் சேலம், கோயம்புத்தூர்,திருப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக மக்கள் கூடும் இடங்களான சந்தை,வணிக வளாகங்கள் போன்றவற்றை தற்காலிகமாக மூடி உள்ளனர். குறிப்பாக சேலத்தில் மாலை 6 மணிக்கு மேல் கடைகள்,பழக்கடைகள் இயங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே தொற்று பரவலில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் கொள்ள முடியும் என அரசாங்கம் கூறிவருகின்றது.ஆனால் மக்கள் முதலில் தடுப்பூசி போட முன் வரத் தயங்கினர்.இரண்டாம் அலையின் தாக்கத்தை பார்த்து தற்போது தடுப்பூசி போட முன்வந்துள்ளனர்.

இருப்பினும் கிராமப்பகுதிகளில் மக்கள் இன்றளவும் தடுப்பூசி போட முன்வரவில்லை.அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா இல்லாத கரூர் என்ற மாபெரும் ஒரு இயக்கத்தை உருவாக்கினர்.அந்த இயக்கத்தில் உள்ள அனைவரும் கடுமையாக செயல்பட்டனர். அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொரானா விழிப்புணர்வு வாரமாக அனைத்து மாவட்டங்களிலும் கடைபிடிக்கப்பட்டது.அந்த விழிப்புணர்வு வாரத்தில் கரூர் மாவட்டம் மக்களுக்கு பல நிகழ்ச்சிகள் மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தியது.அவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் 7 கிராம பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.அந்த வகையில் கரூரில் ஏழு கிராம பகுதிகளில் உள்ள மக்கள் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

அவ்வாறு தடுப்பூசி செலுத்த வைத்த அந்த இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.மேலும் அம்மாவட்ட ஆட்சியர் அந்த இயக்கத்தில் உள்ள  செவிலியர்கள் மற்றும் இயக்கத்தின் செயல்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.மேலும் மாவட்ட ஆட்சியர் கூறியது,கொரோனா தடுப்பு பணிகள் மூலம் தங்களது உயிரை துச்சமென நினைத்து மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி 100% தடுப்பூசி போட்டதற்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் கரூர் மாவட்டம் முழுவதும் 100% தடுப்பூசி என்ற பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந்த ஏழு கிராம பகுதிகளை போல மற்ற ஊர்களிலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதை சுகாதார பணியாளர்கள் விரைவாக முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.