Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை காணாமல் போகச் செய்யும் பானம் இது!

#image_title

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை காணாமல் போகச் செய்யும் பானம் இது!

வயது வந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும். இந்த மாதவிடாய் காலத்தில் அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுவதால் வயிற்று வலி, உடல் சோர்வு, சத்து குறைபாடு போன்றவை பெண்களுக்கு ஏற்படும்.

இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். சிலருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்படும். இதனால் அவர்களால் எந்த ஒரு வேலையும் செய்யமுடியாத நிலை ஏற்படும். இந்த வயிற்று வலியை குணமாக்க கிராம்பு நீர் குடிப்பது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)கிராம்பு
2)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 2 அல்லது 3 கிராம்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கிராம்பு தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்கவும். இந்த கிராம்பு நீர் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக் கூடிய வயிற்று வலியை குணமாக்க உதவுகிறது.

அதுமட்டும் இன்றி கிராம்பு நீர் செரிமானக் கோளாறு, பல் ஈறு வலியை முழுமையான குணப்படுத்துகிறது.

Exit mobile version