Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதான் குடும்ப குத்து விளக்கு!. நான் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன்!.. எனக்கு ஏற்ற பொழப்பை பார்த்துக் கொள்வேன்…

இதான் குடும்ப குத்து விளக்கு!. நான் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன்!.. எனக்கு ஏற்ற பொழப்பை பார்த்துக் கொள்வேன்…

ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சாய்பல்லவி செய்திகள் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் சிலர் சாய்பல்லவையை அணுகி இது போன்ற கனமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும். ஆகையால் கதையை மாற்றுங்கள் கவர்ச்சியாகவும் காதல் காட்சிகளில் நெருக்கமாகவும் நடிக்க சம்மதியுங்கள் என்று சிலர் அவரை வற்புறுத்தி உள்ளனர்.

அதற்கு செய்தியாளர்களிடம் பதிலடி கொடுத்த சாய் பல்லவி. அப்படியெல்லாம் நீங்கள் கூறியபடி நான் நடிக்க முடியாது. சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. நான் என் டாக்டர் வேலையை பார்த்துக் கொண்டிருப்பேன். இப்படி இல்லையென்றால் ஷாப் வைத்து சம்பாதிப்பேன். அதுவும் முடியவில்லை என்றால் ஏதாவது எனக்கு தகுந்தார் போல் ஒரு வேலைக்கு செல்வேன்.

நீங்கள் கூறியபடி நடித்தால் என் மதிப்பு நானே குறைத்து விடுவது போல் ஆகிவிடும். ஆகையால் எனக்கு பிடித்தபடி எனக்கு விருப்பம் உள்ளபடி தான் நான் நடிக்க தொடங்குவேன். மேலும் விருப்பமில்லாத கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன். இவராகக் கூறிய தகவல் சாய்பல்லவி கூறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இச் செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

Exit mobile version