Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

49 வயதுடைய ஹீரோவுடன் கை கோர்க்கும் சீதா ராமம் பட நாயகி!!

49-year-old hero Sita Ramm heroine!!

49-year-old hero Sita Ramm heroine!!

“லவ் சோனியா” என்ற ஹிந்தி படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகிற்கு வந்தவர் மிருணால் தாகூர்.இவர் படங்களில் மட்டுமின்றி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் “கும் கும் பாக்யா” என்ற தொடரிலும் நாயகிகளுள் ஒருவராக நடித்துள்ளார். இந்த தொடர் பெரிதளவில் ஹிட் ஆனாலும், இவர் நடித்த படங்கள் எதுவும் ரசிகர்களை கவரவில்லை என்றே கூறலாம்.

மனம் சோர்வடையாமல் இவர் திரையுலகில் தனது பயணத்தை தொடர்ந்தார். அதன் பயனாக இவர் நடித்த கோஸ்ட் ஸ்டோரீஸ், சூப்பர் 30, ஜெர்ஸி என்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

2022 ம் ஆண்டு இவர் நடித்த ” சீதா ராமம் ” என்ற படம் தெலுங்கு ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களின் மனதிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தது. இப்படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் இதில் இவர் “சீதா மகாலட்சுமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்களால் மறக்க முடியாத பெயராக அமைந்தது என்றே கூறலாம்.

மேலும் இந்த படத்தினை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் நானிக்கு ஜோடியாக நடித்த ‘ஹாய் நன்னா’ திரைப்படமும் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், இவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கின.

மிருணாள் தாகூர் என்னதான் தென்னிந்திய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும், தமிழ் திரைப்படங்களில் இன்னும் நடிக்கவில்லை என்பது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் முதன் முதலாக தமிழில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.

இவர் தமிழில் நடிக்க இருக்கும் முதல் படம் ” சூர்யா 45 ” ஆகும். நடிகர் சூர்யாவுக்கு தற்பொழுது 49 வயதாகிறது. நடிகர் சூர்யாவுடன் தான் நடிகை மிருணாள் தாகூர் நடிக்கப் போகிறார்.இந்த படத்தை இயக்குபவர், ஆர்.ஜே.பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version