Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !..

This is the love of brother and sister! Affectionate brother who caught his brother in an instant!..

This is the love of brother and sister! Affectionate brother who caught his brother in an instant!..

அண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !..

கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் சகோதரர் இருவர்கள் தங்களது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.அவரது பெற்றோர்களோ வீட்டின் உள்ளே அவர்களது வேலையை பார்த்து வந்தனர்.அப்போது தம்பி வீட்டின் மேல் மாடியில் ஏறி சுத்தம் செய்து வந்தார். அண்ணனும் கீழ்தளத்தில் உள்ள ஒட்டடைகளை அடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எவரும் எதிர்பாராத விதமாக திடீரென மாடியிலிருந்த  தம்பி கீழே தவறி விழுந்தார். அண்ணனும் லாபகமாக கையாண்டு தம்பியை காப்பாற்றியுள்ளார். இதில் தம்பியின் எடை தாங்காமல் அண்ணனோ தரையின் கீழே விழுந்தார். விபத்தில் இருவருக்கும் சிறிய காயங்கள் கூட ஏற்படவில்லை.

இந்த காட்சிகள் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இருவரும் கீழே விழுந்த நிலையில் தம்பி எழுந்து அண்ணனை தூக்கி உள்ளார். அப்போது இருவரும் சிரித்துக்கொண்டே எழுந்தனர். இந்த காட்சி அண்ணன் தம்பியின் பாசத்தை வெளிக்காட்டியது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வைரலாகி வருகிறது.

Exit mobile version