ஹீரோவாக நடிகர் சூரி நடிக்கும் திரைப்படத்தில் அடுத்து வில்லன் இவர்தான்!!! வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்த மலையாள நடிகர்!!!

0
120

ஹீரோவாக நடிகர் சூரி நடிக்கும் திரைப்படத்தில் அடுத்து வில்லன் இவர்தான்!!! வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்த மலையாள நடிகர்!!!

நடிகர் சூரி அடுத்ததாக கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு அனுகியுள்ளது. அந்த பிரபல மலையாள நடிகரும் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 1 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. விடுதலை 1 திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது இயக்குநர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

R.S. Durai Senthilkumar

கொட்டுக்காளி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூரி அவர்கள் அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றிய துரை செந்தில்குமார் அவர்கள் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அந்த பிரபல மலையாள நடிகர் வேறு யாரும் இல்லை. அவர் நடிகர் உன்னி முகுந்தன் அவர்கள் தான். மலையாள சினி உலகில் முன்னணி நடிகராக இருக்கும் உன்னி முகுந்தன் அவர்களிடம் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று படக்குழு கேட்டனர்.

வில்லன் கதாப்பாத்திரம் நன்றாக இருந்ததால் நடிகர் உன்னி முகுந்தன்.அவர்கள் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இயக்குநர் வெற்றி மாறன் அவர்களின் தீவிர ரசிகன் நடிகர் உன்னி முகுந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.