Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அனைத்துவித வாத நோய்களுக்கும் இது ஒன்றே நிரந்தர தீர்வு தரும்!!

#image_title

அனைத்துவித வாத நோய்களுக்கும் இது ஒன்றே நிரந்தர தீர்வு தரும்!!

வாத நோய் என்பது உடலின் ஒரு பகுதியில் கை, கால்களை அசைக்க முடியாதபடி செயல் இழக்கக்கூடும். மேலும் செயலிழந்த பகுதியில் முகம் கோணலாகி பாயும் அசைக்க முடியாமல் போய்விடும். முகப்பகுதியில் வாத பாதிப்பு ஏற்படும் பொழுது பேசுவதில் சம்மம் ஏற்பட்டு பேச்சு தடுமாற்றத்துடன் இருக்கும்.

வாதம் நோய்க்கு சிகிச்சை அளிப்பது முன்பெல்லாம் கடினமான நிலையாக இருந்தது. தற்போது வாத நோயை குணப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. மாரடிப்புக்கு அடுத்தபடியாக மக்களை அதிகம் பாதிக்கும் வாத நோய் வராமல் தடுப்பதற்கு என்ன வழி உள்ளது. உணவின் மூலம் இதனை எப்படி தடுக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுதல், உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை செய்வதன் மூலமாக உடலில் வாத நோயை உண்டாக்கும் நச்சுக்கள் சேராமல் பார்த்துக் கொள்வதன் மூலம் வாத நோய் வராமல் தடுக்க முடியும்.

தேவையான பொருட்கள்:

1. சீரகம்

2. இஞ்சி

3. பூண்டு

4. லவங்கப்பட்டை

சீரகம் இதில் நரம்புகளுக்கு பலம் சேர்க்கக்கூடிய அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து உள்ளது. குறிப்பாக சீரகத்தில் vitamin c, vitamin D சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. நம் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தின் அடைப்புகளை சரி செய்ய சீரகம் உதவுகிறது. சீரகத்தில் உள்ள கால்சியம் சத்து மூட்டு வலி வராமல் தடுக்க உதவுகிறது.

இஞ்சி இதில் விட்டமின் சி மற்றும் நார் சத்து நிறைந்து காணப்படுகிறது. இஞ்சி ஆன்ட்டி இன்ப்லமெட்ரிக் பிராப்பர்டி நிறைந்து உள்ளதால் மூட்டு தேய்மானத்தை உடனடியாக தருகிறது.

பூண்டு ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய உதவுகிறது. பூண்டி அலிசின் என்ற வேதிப்பொருள் உள்ளது. அந்த வேதிப்பொருள் நம் உடலில் வரக்கூடிய அனைத்து வலிகளையும் போக்கி சோம்பேறித்தனத்தை உடனடியாக போக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உடனடியாக நிவாரணம் தரக்கூடியது பூண்டு.

லவங்க பட்டை மூட்டு, எலும்பு சார்ந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும். நம் உடல்ல இருக்கக்கூடிய ஒவ்வொரு எழும்புகளையும் மூட்டுகளையும் உறுதியாக்க உதவுகிறது.

ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சீரகம், இஞ்சி சில துண்டுகள், 5 பல் பூண்டு, சிறிதளவு லவங்கப்பட்டை சேர்த்து நன்கு மிதமான சூட்டில் கொதிக்க வைத்து அரை டம்ளர் தண்ணியாக மாறியதும் வடிகட்டி குடித்து வருகையில் வாத நோய் வராமல் தடுக்கலாம்.

 

 

 

 

Exit mobile version