நான் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்க இது மட்டும் தான் காரணம்!!லேடி சூப்பர் ஸ்டார்!!

0
181
This is the only reason I can't have a baby!!Lady Superstar!!

கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாரதிராஜாவால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி.

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக நடித்து வந்த இவரை இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். குறிப்பாக, பி வாசு இயக்கிய மன்னன் படத்தில், ரஜினிக்கு மனைவியாக விஜயசாந்தி நடித்திருப்பார். ரஜினியை எதிர்த்து நிற்கும் கேரக்டரில் அவர் நடிக்கும் அளவுக்கு முன்னணி நடிகையாக இருந்ததால்தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று சினிமாவில் விஜயசாந்தியை அழைத்தார்கள்.

லேடி சூப்பர் ஸ்டார் என்ற தலை கனத்தால் இவர் படப்பிடிப்பு தளத்தில் திமிராக நடந்து கொண்டிருக்கிறார். திரைப்படத்தின் இயக்குனர் சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர் மட்டுமே என்று அவருடைய ஆணவம் அழியும் விதமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட விஜயசாந்தி அவர்களுக்கு, சினிமா துறையில் வாய்ப்புகள் குறையும் பொழுது அரசியலில் முழு நேரமாக ஈடுபட ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் தான் அளித்த பேட்டி ஒன்றில் குழந்தை பெற்றுக் கொள்ளாதது குறித்து தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவை பின்வருமாறு :-

திருமணம் ஆகி பல வருடங்களாக எங்களுக்கு குழந்தைகள் இல்லை. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். எங்களுக்கு குழந்தை இல்லாததற்கு நானும் என் கணவரும் தான் காரணம் என அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசியவர், இது எங்களுடைய முடிவு தான் என்றும் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது அனைத்து பெண்களுக்கும் மிகவும் பிடித்த ஒரு விஷயம். ஆனால் நான் குழந்தை பெற்றுக் கொள்ளாததற்கு ஒரு காரணம் உண்டு என்று தெரிவித்து இருக்கிறார்.

அந்த காரணமாக அவர் கூறியிருப்பது :-

எங்கேயோ ஒரு இடத்தில், எனக்கு குழந்தைகள் இருந்தால் அதை வைத்து தெலங்கானாவில் பிளாக்மெயில் செய்வார்கள் என்ற ஒரு எண்ணம் வந்தது. அப்போது அப்படிப்பட்ட ஒரு மோசமான சூழ்நிலைதான் அரசியலிலும் இருந்தது. எனது கணவரிடம் இதுபற்றி கூறிய போது அவரும் புரிந்துக்கொண்டு சரி என்றார். அதனால்தான் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.