பொதுவாக நீங்கள் குறைவாக சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால் குளிர்காலத்தில் அது எதிர்மறையாக நடக்கும்.அதாவது தண்ணீர் குடிக்காவிட்டாலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க கழிவறை நோக்கி ஓடுவீர்கள்.
‘சில நேரம் சிறுநீரை அடக்கி வைக்க முடியாத நிலை ஏற்படலாம்.இது குளிர்காலத்தில் ஏற்படக் கூடிய சாதாரண நிகழ்வு தான்.வெயில் காலத்தில் வியர்வை வழியாக கழுவிகள் வெளியேறுவதால் சிறுநீர் கழிப்பது குறைகிறது.
குளிர்காலத்தில் வியர்வை வெளியேறுவது குறைவு என்பதால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேறும் அதிகப்படியான பணியை சிறுநீரகம் செய்கிறது.இதன் விளைவாகத் தான் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் ஏற்படுகிறது.
அது மட்டுமின்றி சிறுநீர் கழிக்க வேறு சில நோய் பாதிப்புகள் இருந்தாலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றும்.சிலருக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு இயற்கையாக நடக்கும்.சிலருக்கு நோய் பாதிப்புகளின் விளைவாக அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.
சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் குளிர்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் உண்டாகும்.குளிர்காலத்தில் இரத்த நாளங்கள் சுருங்கி அதிக இரத்த ஓட்டம் நடைபெறும்.இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
சிலருக்கு சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் இருக்கும்.இதனால் உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.உங்களுக்கு அளவிற்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டால் நீங்கள் மருத்துவரை அணுகி உரிய தீர்வு காண்பது சரியாக இருக்கும்.