எல்லாவற்றிர்க்கும் இவர்தான் காரணம்! வெகுண்டெழுந்த சிம்புவின் தாய்!
நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெக் கார்டு போடுவதாக ஒரு தகவல் எழுப்பப் பட்டுள்ளது. இது குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கொதித்தெழுந்துள்ளார். சிம்பு நடிப்பில் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார். இதற்காக சிம்பு ஒரு படத்திற்கு இலவசமாக நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பஞ்சாயத்தில் மூலம் முடிவு செய்யப்பட்டது.
அப்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த விஷால் இந்த உத்தரவை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நான்கு தயாரிப்பாளர்கள் சிம்புவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு உரிய முடிவை சிம்புதான் சொல்ல வேண்டும் என்றும், அதன் பின்னர்தான் சிம்பு புதுப்படங்களில் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதுவரைக்கும் சிம்பு நடிக்கும் படங்களுக்கு பெப்சி தொழிலாளர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு என்ற படத்திற்கு பெப்சி தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து உள்ளனர். இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம், பெப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்குமான ஒப்பந்தம் இனி செல்லாது என அதிரடியாக அறிவித்து உள்ளனர். இதையடுத்து பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி தயாரிப்பாளர் மற்றும் சங்க நிர்வாகிகளும் கலந்து ஆலோசனை செய்தனர்.
இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் சிம்பு தான் இதற்கு சிம்பு ஒரு முடிவை சொல்ல வேண்டும் என்றும், அப்படி இல்லாவிட்டால் அவருக்கு ரெட் கார்ட் போடுவது என்றும் முடிவு எடுத்துள்ளதாக வந்த தகவலை கேட்டு உஷாராணி ராஜேந்திரன் கோபத்தில் வெடித்து உள்ளார். அவர் சிம்பு சம்பளமே வாங்காமல் ஒரு படம் நடித்து கொடுக்க வேண்டும் என்றும் அப்படி இல்லாத பட்சத்தில் ஒவ்வொரு படத்திற்கும் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் கப்பம் கட்டவேண்டும் என்றும் எப்படி எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் விஷால் உத்தரவு போட்டுள்ளார்.
அந்த உத்தரவை தயாரிப்பாளர்களும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிம்புவின் ஒப்புதல் இல்லாமல் தீர்மானம் கொண்டு வருவதற்கு விஷால் என்ன உச்சநீதிமன்ற நீதிபதியா? என்றும், அதை சொல்ல விஷால் யார்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவரே தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து 14 கோடி ரூபாயை காலி செய்து வைத்துள்ளார். அதற்கே இன்று வரைக்கும் அவர் பதில் சொல்லவில்லை என்றும், ஆனால் அவர் போட்ட தீர்மானத்தை மட்டும் வைத்துக்கொண்டு சிம்புவுக்கு ரெட் கார்ட் போடுவேன் என்று சொல்வது எப்படி நியாயம் என்றும் கேட்டு உள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்று தொடங்கியதே இவர்கள் இப்படி கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டே இருப்பதற்கு தான் என்றும் கூறினார். இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கேட்டால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் எங்களுடைய சட்டை பையில் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் முதல்வர் இப்படி ஒரு விஷயத்திற்கு துணை போக மாட்டார் என்று நானே சொல்லுவேன். ஏனெனில் திமுக கட்சிக்காக என் கணவர் எப்படி எல்லாம் பாடு பட்டிருக்கிறார் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.
திமுக மேடைகளில் காலை 5 மணி வரை கூட அவர் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தொண்டையிலிருந்து இரத்தம் வரும் அதையும் பொருட்படுத்தாமல் அவர் பேசியிருக்கிறார். அதேபோல் கருணாநிதி அய்யாவை கைது செய்தபோது நான் போய் ஜெயிலை உடைத்து அவரைக் கூட்டி வருவேன் என்றும் என் கணவர் கூறினார். அந்த அளவுக்கு திமுகவிற்காக என் கணவர் பாடுபட்டிருக்கிறார்.
எந்த பிரதிபலனும் பார்க்காமல் தான் நாங்கள் திமுகவிற்கு உழைத்தோம். அதனால் சிம்புவுக்கு ரெட் கார்ட் போடுவதற்கும், படத்தை நிறுத்துவதற்கும் முதல்வர் துணை போக போகமாட்டார். அவருடைய பெயரைச் சொல்லி தயாரிப்பாளர்கள்தான் தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும், தயாரிப்பாளர்களின் மிரட்டல்கள் தொடர்ந்தால், நானே முதல்வரை நேரில் சென்று சந்திப்பேன். மேலும் பாரதப் பிரதமர் மோடி அய்யாவையும் போய் சந்திப்பேன் என்றும் காட்டம் தெரிவித்துள்ளார்.