Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேரளாவில் தயாரிக்கப்படும் லெமன் ஜூஸ் சுவையாக இருக்க.. இது தான் காரணம்!

#image_title

கேரளாவில் தயாரிக்கப்படும் லெமன் ஜூஸ் சுவையாக இருக்க.. இது தான் காரணம்!

உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் பானம்… எலுமிச்சை சாறு மற்றும் சில பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கும் முறை பற்றி கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்…

*லெமன் – ஒன்று
*புதினா – 1 இலை
*இஞ்சி – 1 துண்டு(சிறியது)
*தேங்காய் துண்டு – 1
(அல்லது) முந்திரி பருப்பு
*உப்பு – சிட்டிகை அளவு
*சர்க்கரை – 7 ஸ்பூன்
*தண்ணீர் – 3 டம்ளர்

செய்முறை..

ஒரு பழுத்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் விதை நீக்கி வைக்கவும். அடுத்து 1 துண்டு இஞ்சி தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். அதேபோல் 1 துண்டு தேங்காயின் தோலை நீக்கி அதன் வெள்ளை பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து கொள்ளவும். அடுத்து அதில் அந்த எலுமிச்சையின் தோல் சிறிது சேர்க்கவும். பிறகு தோல் நீக்கி வைத்துள்ள தேங்காய் துண்டு, இஞ்சி மற்றும் 1 புதினா இலை, சிட்டிகை அளவு உப்பு, 7 ஸ்பூன் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

பிறகு அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடவும். இதை டம்ளருக்கு மாற்றி பருகவும்.

Exit mobile version