பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.கர்ப்பிணி தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்தால் மட்டுமே கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
கர்ப்பிணிகளுக்கு கால்சியம் சத்து மிக முக்கியமான ஒன்று.பாலில் கால்சியம் சத்து அதிகளவு உள்ளதால் தினம் ஒரு கிளாஸ் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.அதிலும் நெய் சேர்த்த பாலை எடுத்துக் கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
சூடான பாலில் சிறிது கலந்து குடித்தால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.நெயில் உள்ள வைட்டமின் கே,வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் கரு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.பாலில் நெய் சேர்த்து பருகுவதால் குழந்தையின் மூளை வளர்ச்சி மேம்படும்.
கர்ப்ப காலத்தில் நெய் சேர்த்த பாலை பருகி வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.நெய் கலந்த பானத்தை பருகி வந்தால் சுகப் பிரசவம் எளிதாகும்.கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை அஜீரணக் கோளாறு.
நெய் சேர்த்த பாலை பருகினால் செரிமானப் பிரச்சனை நீங்கி குடல் இயக்கம் சீராகும்.இதனால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுவது முற்றிலும் கட்டுப்படும்.
நெயில் உள்ள ஆரோக்கியம் நிறைந்த கொழுப்பு உடலை சுசுறுப்பாக இயங்க வைக்கிறது.கர்ப்ப காலத்தில் அதிக சோர்வை சந்திக்கும் பெண்கள் பாலில் நெய் கலந்து பருகலாம்.
சூடான பாலில் நெய் கலந்து பருகுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இதனால் சளி,இருமல் போன்ற நோய்த்தொற்று ஏற்படுவது தடுக்கப்படும்.