வளர்ந்து வரக்கூடிய ஏஐ தொழில்நுட்பமானது தற்பொழுது உள்ள சினிமா துறையில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இருந்த நடிகர்களை போன்ற உருவ அமைப்புகள் மற்றும் அவர்களுடைய குரல்கள் போன்றவற்றை ரீகிரியேட் செய்வதுடன், பாடகர் உடைய குரலையும் இதன் மூலம் ரீகிரியேட் செய்து வருகின்றனர்.
இவ்வாறு இசை உலகில் ரீகிரியேட் செய்யப்படுவதால் பல நல்ல பாடகர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் செல்வதற்கான நிலை உள்ளது என்று இதனை பலரும் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ள கருத்து :-
தமிழ் சினிமாவில் முதல் முதலில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பாடகர் பாடல் பாடியுள்ளதைப்போல் உருவாக்கப்பட்ட பாடல் என்றால் அது, பாம்பா பாக்யா குரலில் லால் சலாம் படத்தில் இடம் பெற்ற பாடல்தான்.
அதன் பின்னர் கோட் மற்றும் வேட்டையன் படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், மறைந்த பாடகரின் மகனும் பாடகருமான எஸ்.பி. சரண் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, ஏ.ஐ. வந்த பின்னர் யாரு வேண்டுமானாலும் யார் இசையில் வேண்டுமானாலும் எந்த மாதிரியான பாடலை வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலை வந்துவிட்டதாக இவர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், ஏ.ஐ., மூலம் குரலைத்தான் ரீ-கிரியேட் செய்ய முடியும் உணர்வுகளைக் கொண்டு வர முடியாது. அப்பாவின் குரலை ஏ.ஐ., செய்து கொள்கின்றோம் எனக் கேட்டு பலர் வருகின்றனர். ஆனால் நான் அனைவருக்கும் முடியாது எனச் சொல்லிவிடுகின்றேன்” எனக் கூறியுள்ளார்.