Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாழைப்பழம் சாப்பிட உரிய நேரம் இது தான்!! இந்த டைமில் சாப்பிட்டால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்!!

நம் அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்று வாழை.இதில் செவ்வாழை,பச்சை வாழை,ரஸ்தாளி,தேன் வாழை,மொந்தன் என்ற பல வகை வாழைப்பழம் இருக்கிறது.வாழைப்பழ ம் மலிவு விலையில் கிடைக்க கூடிய பழம் என்பதை தாண்டி இதை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

பழங்களின் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்றால் அது வாழைப்பழம் தான்.இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.விளையாட்டு வீரர்கள் கூட அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுகின்றனர்.

வாழைப்பழத்தில் இருக்கின்ற மாங்கனீசு சத்து உடலுக்கு புத்துணர்வை கொடுக்க உதவுகிறது.இந்த பழத்தை காலை உணவிற்கு பின் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாழைப்பழ ஊட்டசத்துக்கள்:-

1)பொட்டாசியம்
2)இரும்புச்சத்து
3)கால்சியம்
4)நார்ச்சத்து
5)மெக்னீசியம்
6)வைட்டமின்கள்

வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1.உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.

2.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டுவது நல்லது.மலக் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது.

3.காலை நேரத்தில் உடல் புத்துணர்வாக இருக்க வாழைப்பழம் உட்கொள்ளலாம்.உடல் வலிமையை அதிகரிக்க வாழைப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.

4.ஞாபகத் திறன் மேம்பட வாழைப்பழத்தை தினமும் சாப்பிட வேண்டும்.அடிக்கடி பசி எடுக்கும் பிரச்சனை இருந்தால் வாழைப்பழத்தை உட்கொள்ளலாம்.இதனால் பசி கட்டுப்படும்.

5.குடல் ஆரோக்கியம் மேம்பட வாழைப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.உடல் சோர்வு பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.ஆனால் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது அல்ல.

Exit mobile version