ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 3 மணி நிலவரம் இதுதான்!
தமிழகத்தில் இருந்த சில மாவட்டங்களை இரண்டாக பிரித்ததன் காரணமாக தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடந்து முடிந்தாலும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் திரும்பவும் தேர்தல் நடத்தப் படுவதாக அறிவிக்கப் பட்டது. அதன்படி இன்று அந்த 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது.
மேலும் அதன் காரணமாக தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் அடுத்தகட்டமாக 9 ஆம் தேதியான சனிக்கிழமையும் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதாக அறிவித்தது.
முதல் இரண்டு மணி நேரத்தில் 7.72 சதவிகித வாக்குகள் நடைபெற்றதாக மாநில தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். ஒன்பது மாவட்டங்களிலும் சிறப்பாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாலை 3 மணி நிலவரப்படி இந்த வாக்கு பதிவுகள் இருந்ததாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.