ஆளுநர் நாற்காலியில் கெத்தா இருந்த தமிழிசை அக்காவுக்கு இப்படி நிலைமையா..??
தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளார் தமிழிசை செளந்தரராஜன். எனவே எப்படியாவது வெற்றி பெற்று விடவேண்டும் என்ற முனைப்போடு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
தென்சென்னை பொருத்தவரை மொத்தம் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றின் சோழிங்கநல்லூர் தொகுதி தான் தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகும். இங்கு மட்டும் சுமார் 6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இருப்பினும் தென்சென்னை தொகுதி திமுகவின் கோட்டை என்றே அழைக்கப்படுகிறது.
இந்த முறை திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் களம் காண்கிறார். இவர் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தென்சென்னை தொகுதிகளில் திமுக, அதிமுகவிற்கு இருப்பது போலவே பாஜகவிற்கும் ஒரு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அதை பிடிக்கும் நோக்கில் தான் தற்போது தமிழிசை செளந்தரராஜன் இறங்கியுள்ளார்.
அதற்காக வீதிகளில் இறங்கி மட்டுமல்ல ஆன்லைன் மூலமும் நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார். எப்படியாவது இந்த முறை தாமரையை மலர செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன் இன்று மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்காக காத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார ரயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்து பாஜகவிற்கு வாக்கு சேகரிப்பதற்காக தமிழிசை ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அடிக்கும் வெயிலில் வியர்த்து விறுவிறுத்து அவர் அமர்ந்திருந்த நிலையை கண்ட பலரும் தமிழிசை அக்கா எங்க எப்படி இருக்க வேண்டிய ஆளு பாவம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.