இந்த நேரத்தில்தான் டாஸ்மாக் கடைகள் இயங்கும்! பணிக்குச் செல்வதா பாருக்கு செல்வதா மது பிரியர்களின் ஆதங்கம்?
தமிழகத்திற்கு அதிக வருமானம் ஈட்டி தருவதே இந்த டாஸ்மாக் கடைகள் தான். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் கருணா தோற்றமானது ருத்ரதாண்டவம் எடுத்த நேரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் சிறிது நாட்களுக்கு மூடி வைக்கப் பட்டது. அதனை எடுத்து கால நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.
அப்பொழுது பகல் 12 மணி என தொடங்கி இரவு 10 மணிவரை செயல்பட்டு வந்தது. மதுப் பிரியர்கள் டோக்கன்களை வாங்கிக் கொண்டு நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி கொண்டு சென்றனர். கொரோனா தொற்று பரவல் முடிந்த பிறகு தற்பொழுது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்தது.தற்பொழுது இந்த நேரமும் இன்றி டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இனி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என கூறியுள்ளனர்.இது மதுபிரியர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.வேலைக்கு செல்வதா இல்லை மது கடைக்கு செல்வதா என்று தெரியாமல் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த நேர கட்டுப்பாட்டால் அரசுக்கு அதிக நட்டம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.இந்த நேர மாற்றம் ஒமைக்ரா வைரஸ் தற்பொழுது பரவி வருவதால் போடப்பட்டிருக்களாம் என்றும் கூறுகின்றனர்.மது கடைகளில் அதிகளவு கூட்டம் கூடுவதால் இவ்வாறான கட்டுப்பாடுகள் அமல்டுத்தப்பட்டு வருகிறது.