வருடத்தில் பாரம்பரிய மாதம் இதுதான்! அமெரிக்க மக்கள் திடீர் அறிவிப்பு!
இந்துக்கள் என்றாலே பொதுவாக சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறிப் போய்தான் இருப்பார்கள். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் பல சம்பிரதாயங்கள் பின்பற்றினாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவும், அவர்களுக்கு தகுந்த மாதிரியும் செய்து வைத்து இருப்பார்கள்.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் சில இந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபா் மாதத்தில்தான் எப்போதுமே பொதுவாக நவராத்திரி, தசரா, துா்கா பூஜை, மற்றும் தீபாவளி உள்ளிட்ட பல பண்டிகைகளை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பலர் கொண்டாடு வருகிறோம். அதிலும் முக்கியமாக புரட்டாசி மாதமும் வருகிறது.
எனவே, அமெரிக்காவில் இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட அக்டோபா்தான் மிகவும் பொருத்தமாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும் என்றும் பல இந்து அமைப்பினா் முடிவு செய்துள்ளனர். யோகாசனத்திலிருந்து உணவு வரை, கொண்டாட்டம் முதல் கொடை வரை, நாட்டியத்திலிருந்து இசை வரை, அகிம்சை முதல் தத்துவாா்த்தம் வரை அமெரிக்காவின் அன்றாட வாழ்வியலில் இந்து மதம் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது.
அக்டோபா் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதை எம்.பி.க்கள் உள்ளிட்ட பல மக்கள் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனா். இதற்கான அறிவிக்கையை 20 மாகாணங்கள் வெளியிட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.