தமிழகம் ஊழலில் மட்டுமே வெற்றி நடைபோடுகிறது! கனிமொழி விளாசல்!

0
156

தேர்தலுக்கு இன்னும் நான்கு தினங்களே இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகள் யாவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதோடு அவர் செல்லும் இடமெல்லாம் அலைகடலென மக்கள் குவிகிறார்கள்.

அதோடு அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழகத்தின் நிலவரத்தை ஒட்டுமொத்தமாக மாற்றும் விதமாக இருந்து வருகிறது. இதனால் எதிர்கட்சியான திமுக சற்று அதிர்ச்சி அடைந்து இருக்கிறது. அதன்காரணமாக, அதிமுகவின் தேர்தல் அறிக்கையின்மீது தன்னுடைய குறைகளை தெரிவித்து வருகிறது எதிர்க்கட்சியான திமுக.

இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டசபைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளராக களமிறங்கும் பார்வர்ட் பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவனை ஆதரித்து திமுகவைச் சார்ந்த கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததை நான் பெருமையாக எண்ணுகிறேன் என்று தெரிவித்தார்

.இந்த இரண்டு பேருமே நம்முடைய சமூகத்தை உயர்த்த வேண்டும் சமூகத்திற்காகவும் சுயமரியாதை உடைய சமூகமாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். ஆனால் இப்போது இருக்கின்ற ஆட்சி டெல்லியில் அடகு வைத்த ஆட்சியாக இருக்கிறது என்று விமர்சனம் செய்தார்.அதே நேரம் தமிழகத்தின் உரிமைகளை அதிமுக அடகு வைத்துவிட்டது என தெரிவித்திருக்கிறார்.

உத்தரபிரதேசத்தில் பெண்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது என சாடியிருக்கிறார் கனிமொழி.இந்த ஆட்சி யாருக்குமே பயன்படாத ஒரு ஆட்சியாக இருக்கிறது. வேலை வாய்ப்பு கூட ஏற்படுத்திக் கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார்.ஆகவே யாருக்குமே உபயோகப்படாத இந்த ஆட்சியை தூக்கி போட்டுவிட்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி திமுகவை தேர்ந்தெடுத்து தமிழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சுங்கள் என தெரிவித்திருக்கின்றார். அதோடு தமிழகம் ஊழலில் மட்டும் தான் வெற்றி நடைபோடுகிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார் கனிமொழி.