இந்தியாவின் மோசமான மொழி இதுதான்! கூகுள் சொன்ன பதிலால் ஆத்திரமடைந்த மக்கள்!

0
126

கூகுள் என்பது ஒரு search Engine. நாம் என்ன தேடினாலும் அதற்கான விஷயங்களை நமக்கு பதில்களைத் தருவது தான் அதனுடைய வேலை. நமக்கு தெரியாத பல விஷயங்களை அதிலிருந்துதான் தேடி படித்து வருகிறோம் தெரிந்து வருகிறோம். பல மாணவர்கள் இதன் மூலமாகத்தான் படித்து அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவிலேயே எது மோசமான மொழி என கூகுளில் தேடிய பொழுது, கன்னடம் என்ற பதில் வந்துள்ளது. இதை அறிந்த கன்னடம் பேசும் பல மக்கள் ஆவேசமடைந்து உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல அரசியல் கட்சியினரும் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளனர். அத்துடன் கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்ப்வலி இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் இதுகுறித்து கூகுள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என தெரிந்த கூகுள் நிறுவனம் இதுகுறித்து மன்னிப்பு கேட்டுள்ளது. அது மட்டுமின்றி கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்கு மிகவும் வருந்துகிறோம் என்றும் தெரிவித்துள்ள கூகுள் நிறுவனமும் கன்னட மொழி தொடர்பான கூகுள் தேடுதளத்தில் உள்ள தவறான பதிவுகளையும் நீக்கியுள்ளது.