Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் 12 ராசியினர் செய்ய வேண்டிய தானங்கள் இதுதான்!!

பொங்கல் பண்டிகை அன்று எந்தெந்த ராசியினர் என்ன தானம் செய்தால் பலன் கிடைக்கும் என்பது குறித்து தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

1)மேஷ ராசி

இந்த பொங்கல் தினத்தில் மேஷ ராசியினர் எள் மற்றும் வெல்லத்தை தானமாக கொடுத்தால் யோகங்கள் உண்டாகும்.

2)ரிஷப ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் கருப்பு எள் மற்றும் குண்டு வெல்லத்தை தானமாக கொடுத்தால் கோடி பலன்கள் கிடைக்கும்.

3)மிதுன ராசி

பொங்கல் தினத்தில் மிதுன ராசியினர் வெல்லத்தை தானமாக வழங்கலாம்.அதேபோல் நிலவேம்பில் செய்யப்பட்ட கஷாயத்தை தானம் செய்யலாம்.

4)கடக ராசி

அரிசி,வெள்ளை சர்க்கரை,கருப்பு எள் போன்றவற்றை கடக ராசியினர் இந்த பொங்கல் தினத்தில் தானமாக வழங்கலாம்.

5)சிம்ம ராசி

பொங்கல் பண்டிகையில் முழு கோதுமை,வெல்லம் மற்றும் கருப்பு எள்ளை தானமாக வழங்கலாம்.

6)கன்னி ராசி

முந்திரி,அரிசியை பொங்கல் தினத்தில் கன்னி ராசிகாரர்களுக்கு தானமாக வழங்கலாம்.

7)துலாம் ராசி

கருப்பு எள்,வெல்லம்,சர்க்கரை போன்ற பொருட்களை துலாம் ராசியினர் தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.

8)விருச்சிக ராசி

பொங்கலன்று வெல்லம்,எள் போன்றவற்றை விருச்சிக ராசியினர் தானமாக வழங்கினால் நன்மைகள் கிட்டும்.

9)தனுசு ராசி

பொங்கல் தினத்தில் தனுசு ராசியினர் அரிசியை தானமாக வழங்கினால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

10)மகர ராசி

ஜனவரி 14 அன்று மகர ராசியினர் கோதுமை,அரிசி,எள் போன்றவற்றை தானமாக வழங்கலாம்.

11)கும்ப ராசி

எள்ளில் தயாரிக்கப்பட்ட எண்ணெய்,நாட்டு வெல்லம் போன்றவற்றை தானமாக வழங்கலாம்.

12)மீன ராசி

கருப்பு எள்,உளுந்து பருப்பு,அரிசி,வெல்லம் போன்றவற்றை மீன ராசியினர் தானம் செய்தால் அதீத பலன்கள் கிடைக்கும்.

Exit mobile version